யாரு முதல்ல ஆரம்பிக்குறது? விஜய்யுடன் போட்டி போடும் அஜித்!

யாரு முதல்ல ஆரம்பிக்குறது? விஜய்யுடன் போட்டி போடும் அஜித்!
X
தளபதி 68 படத்தின் ஷூட்டிங் நாளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாகவே தளபதி விஜய் வெங்கட் பிரபு படம் துவங்குமாம்.

யார் படத்தை முதலில் ஆரம்பிப்பது என்பதில் விஜய்யுடன் போட்டி போட்டு வருகிறார் அஜித். இந்நிலையில் தளபதி 68 படமும் அஜித்தின் விடாமுயற்சி படமும் ஒரே நாளில் ஷூட்டிங் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது விஜய், அஜித்தை முந்தியிருக்கிறார். அஜித் பட ஷூட்டிங் துவங்கவுள்ள 2 நாட்களுக்கு முன்பாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் இடையேயான போட்டி பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இவர்கள் இருவரின் படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்தால், அந்த நாளில் தியேட்டர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், அஜித்தின் விடாமுயற்சி படம் மற்றும் விஜய்யின் தளபதி 68 படம் ஒரே நாளில் ஷூட்டிங் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது விஜய், அஜித்தை முந்தியிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் பூஜை நாளை சென்னையில் நடக்கவிருக்கிறது. மேலும், படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. முதலாவதாக படத்தின் ஒரு பாடல் காட்சியைதான் படக்குழுவினர் படம்பிடிக்க விருக்கிறார்களாம்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்காக இசையமைக்கிறாராம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இந்த 20 வருட இடைவெளியே இவர்களின் காம்போ மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி திரைப்படத்தை இயக்கினார். இப்போது தளபதியின் 68 வைத்து படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

விடாமுயற்சி திரைப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியானது. ஆனால், படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதிதான் தொடங்குவதாக கூறப்பட்டது. அதே நேரத்தில், தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபர் 2ஆம் தேதியே தொடங்கிவிட்டது. ஆனால் விடாமுயற்சி இன்று துவங்கியதா இல்லையா என்பது கூட தெரியவில்லை.

விடாமுயற்சி படத்தில் அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் அல்லது வித்யா பாலன் மற்றும் ஹூமா குரேஷி ஆகியோர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்த படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறதாம். மேலும் இந்தியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பே இல்லையாம். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் உருவாவதாக கூறப்படுகிறது.

இதை விஜய் ரசிகர்கள் அஜித்தை முந்திய விஜய் என கொண்டாடிவருகின்றனர். மேலும், விடாமுயற்சி, தளபதி 68 என இரண்டு படங்களுமே 2024ம் ஆண்டு ஒரே நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அநேகமாக கோடை விடுமுறையில் விருந்து படைக்க தயாராகி வருகிறது இரண்டு படங்களின் தயாரிப்பு குழு என்கிறார்கள்.

தளபதி 68 படம் குறித்த கூடுதல் தகவல்கள்:

  • இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
  • முதல் விஜய்க்கு ஜோடி யார் என இன்னும் முடிவாகவில்லை.
  • இரண்டாவது விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார்.
  • படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.
  • படம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
  • இந்த தகவல் வெளியானதையடுத்து, விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!