அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
அஜித்குமார் படம் பற்றிய கேள்விக்கு கோபமடைந்த விக்னேஷ் சிவன் கேள்வி எழுப்பியவரிடம் அதற்கான சரியான பதிலைத் தராமல் நழுவினார். மேலும் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆங்கிலத்தில் கோபமாக பதில் கூறிவிட்டு சென்றார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு அவர் அஜித்குமாரின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. லைகா நிறுவனம் தயாரிக்கவிருந்த அந்த படத்துக்கான அறிவிப்பும் வெளியானது.
துணிவு பட ரிலீஸுக்கு முன்னரே இந்த படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் துணிவு படம் ரிலீஸாகி சில வாரங்களில் வேறொரு பிரச்னை காரணமாக அந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் தூக்கி எறியப்பட்டு, வேறொரு இயக்குநரை வைத்து படத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவனுக்கும் அஜித்துக்கும் இடையில் பிரச்னை என சிலரும், லைகாவுடன்தான் பிரச்னை என சிலரும் பேச கடைசி வரை என்ன பிரச்னை என்பதே தெரியாமல் இருக்கிறது. இதில் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டது மட்டும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், விக்னேஷ் சிவனின் கதைக்கு பதிலாக மகிழ் திருமேனியின் கதையை ஓகே செய்துள்ளார் அஜித்குமார். பாதியில் வேறு ஏதும் பிரச்னை வராமல் இருக்க, முழு ஸ்க்ரிப்டையும் முடித்துவிட்டுதான் படத்தின் அறிவிப்பையே வெளியிடவேண்டும் என்று கூறிவிட்டாராம் அஜித்குமார்.
கதையில் திருப்தி ஏற்படவே முதலில் படத்தின் பூஜையை மட்டும் நடத்தியிருக்கிறார்கள். முழு ஸ்க்ரிப்ட், கதை மாந்தர்கள் தேர்வு, டெக்னிக்கல் டீம் தேர்வு எல்லாம் முடிந்த பிறகே படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், விக்னேஷ் சிவன் கமல்ஹாசன் தயாரிப்பில் அதே படத்தை இயக்குகிறார் என்று கூறுகிறார்கள். அதுவும் லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படத்தை எடுக்கிறார்களாம்.
படத்தின் கதையைக் கேட்டு ராஜ்கமல் தரப்பில் ஓகே செய்தவர் மகேந்திரன். இவர் அடுத்தடுத்து பல புராஜக்ட்களை உருவாக்கியிருக்கிறார். விக்னேஷ் சிவன் கதையில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில், பல நாட்களுக்குப் பிறகு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விக்னேஷ்சிவனை பத்திரிகையாளர்கள் கோபமடையச் செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவனிடம் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்து கேட்காமல், அஜித் படம் என்ன ஆச்சு உண்மையில் நடந்தது என்ன நீங்கள் நீக்கப்பட்டீர்களா என்பன உட்பட சில கேள்விகளைக் கேட்க அதற்கும் இந்நிகழ்ச்சிக்கும் சம்மந்தம் இல்லிங்க என்று கூறிவிட்டு சென்றார். அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இயக்குவீர்களா என்று கேட்டதற்கு திஸ் இஸ் இர்ரிலவண்ட் டூ திஸ் என ஆங்கிலத்தில் பதிலளித்துச் சென்றார்.
அஜித்குமாருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பிரச்னைக்கு காரணமே அவர் சரியாக ஸ்கிரிப்டை முடிக்காமல் இழுத்தடித்ததே என்று கூறப்படுகிறது. அதன்பிறகும் விக்னேஷ் சிவனை அழைத்து லைகா தரப்பு 3 மாத கால அவகாசம் கொடுத்திருக்கிறது. அதையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல், மனைவியுடன் உலக சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார். மேலும் கதையை மட்டும் தயார் செய்துவிட்டு வசனங்களை அவ்வப்போது ரெடி செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தின்போது லோகேஷ் கனகராஜும் இதேபோல சீன் பேப்பர் இல்லாமலே வேலை செய்தார் எனவும், அதை விஜய் குறிப்பிட்டு சொல்லி சீன் பேப்பர் வைத்துதான் வேலை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியதையும் நாம் அறிவோம். இதுபோல பல இளம் இயக்குநர்கள் தங்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையால் பல விசயங்களை செய்யாமலே நேரடியாக ஷூட்டிங் சென்றுவிடுகிறார்கள் என சினிமா செய்தியாளர் ஒருவர் கூறி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu