நயன்தாராவை திருமணம் செய்த விக்னேஷ் சிவனுக்கு ஏற்பட்டுள்ள பெரிய சிக்கல்
இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தல அஜித்குமார்.
ak 62 update, ajith news, ajith latest newsஇயக்குனர் விக்னேஷ் சிவன் அண்மையில் தனது நீண்டகால காதலியான நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் ஏகே 62 படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஆனால் இப்ப வரைக்கும் யாரும் தல அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என அஜித்குமார் ரசிகர்களால் நம்ப முடியவில்லை. தற்போது விக்னேஷ் சிவன் பிரச்சினையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஏ.கே. 62 படமும் பிரச்சினையில் சிக்கி உள்ளது. ஏனென்றால் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம், அதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் போன்ற இரண்டு படத்திற்குமே எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.
ak 62 update, ajith news, ajith latest newsஇதனால் ஏகே 62 படத்தின் மூலம் எப்படியாவது வெற்றி கொடுக்க வேண்டும் என விக்னேஷ் சிவன் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாராவுடன் தாய்லாந்தை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் ஹனிமூன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
இதை அறிந்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா சீக்கிரம் ஏ.கே. 62 படத்தின் முழு கதையையும் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தள்ளி இருக்கிறது.
ஒருவேளை லைக்கா நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் சொல்கின்ற கதை பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என விக்னேஷ் சிவன் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டார். இது அவருக்கு மட்டுமல்ல. ஏகே 62 படத்திற்கும் வந்த பெரிய சோதனையாக பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu