viduthalai படம் எப்படி இருக்கு? விடுதலை திரைவிமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படம் நாளை மறுநாள் மார்ச் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.

HIGHLIGHTS

viduthalai படம் எப்படி இருக்கு? விடுதலை திரைவிமர்சனம்
X

மீண்டும் வெற்றிமாறன் தான் யார் என்பதைக் காட்டியிருக்கிறார். படத்தின் கதையும் திரைக்கதையும் அவருக்கே உரிய பாணியில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர காத்திருக்கிறது. விடுதலை படத்தை பார்த்தவர் முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். சூரியின் நடிப்பும் வெற்றிமாறனின் இயக்கமும் பிரமாதம் என பாராட்டியுள்ளார் இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. | Vetri Maaran viduthalai movie review in tamil

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் விடுதலை. இந்த படம் நாளை மறுநாள் மார்ச் 31ம் தேதி வெளியாக இருக்கிறது. | Vetri Maaran latest movie review in tamil

காவல்துறையில் பணிபுரியும் கடைநிலை காவலராக சூரியும், மக்கள் படை தலைவராக விஜய் சேதுபதியும் நேருக்கு நேர் மோதுவதாக கூறப்படும் படமாக இது அமைந்துள்ளது. காவல்துறையே ஒருவரைப் பிடிக்க போராடும் நிலையில், அவரை ஜீப் ஓட்டும் காவலரான சூரி எப்படி பிடிக்கிறார் என்பதாக மேலோட்டமான கதையில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் வெற்றிமாறன் எப்படி இந்த திரைக்கதையை அமைத்திருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். | soori viduthalai movie review

கதைச் சுருக்கம் | Viduthalai Story

மக்களையும் இயற்கை வளங்களையும் காக்க போராடிக் கொண்டிருக்கும் ஒரு குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான பிரச்னையை படம் பேசுகிறது.

பிரச்னைக்குரிய பகுதியில் காவல் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் சூரி. அவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். இதனால் உயர் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகிறார்.

இதேபகுதியில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. அதற்கான பணிகளைத் துவங்கும் நிலையில் அதை எதிர்த்து சுற்றியுள்ள கிராமத்தினர் போராடுகின்றனர். இவர்களின் தலைவராக விஜய் சேதுபதி இருக்கிறார். இவர் காவல் துறைக்கு தலைவலியாக மாறுகிறார். இதே பகுதியில் வாழ்ந்து வரும் பெண் மீது சூரிக்கு காதல் வருகிறது. அதே நேரம் விஜய் சேதுபதியைப் பிடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

இவரைப் பிடித்து சிறையில் அடைக்க திட்டமிடும் காவல் துறையினர், சூரி உதவியுடன் விஜய் சேதுபதியைப் பிடிக்க செல்கின்றனர். அந்த பகுதியில் வாழும் மக்களை கொடுமைப் படுத்துகின்றனர். இதையெல்லாம் தடுக்க வேண்டுமானால் விஜய் சேதுபதியைப் பிடித்தாக வேண்டும் என்கிற சூழ்நிலை சூரிக்கு. சூரி விஜய் சேதுபதியைப் பிடித்தாரா, விஜய் சேதுபதிக்கு என்ன ஆனது, சூரி காதல் கைக்கூடியதா என்பது மீதிக் கதை

விடுதலை விமர்சனம் | viduthalai movie review

சூரி காமெடி நடிகர் என்ற எண்ணமே இல்லாமல் புதுமுக நடிகராக கதையின் நாயகனாகவே நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு பல படங்களில் இவர் நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளது. விஜய் சேதுபதி படத்தில் குறைந்த நேரமே வருகிறார் என்றாலும் படம் முழுக்க அவரைப் பற்றியே பேசுகிறார்கள்.

இளையராஜா இசை படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற பரபரப்பிலேயே நம்மை வைத்திருக்கிறார்கள்.

Updated On: 3 April 2023 4:24 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 2. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
 3. திருவண்ணாமலை
  கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழக்கும் திட்டம், ஆட்சியர்...
 4. திருவண்ணாமலை
  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு
 5. காஞ்சிபுரம்
  தங்க கிளி வாகனத்தில் கிளிநடை போட்டு வந்த காமாட்சி அம்மன்.
 6. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...
 8. லைஃப்ஸ்டைல்
  Variation Of Washing Soap And Powder கடின நீரில் சோப்புகள் கரையாது......
 9. அரசியல்
  மத்திய மந்திரி எல். முருகன் ராஜ்ய சபா எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வு
 10. அரசியல்
  தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ