Vidamuyarchi மூனுல எது பெஸ்ட்? நீங்க என்ன நினைக்குறீங்க?

Vidamuyarchi மூனுல எது பெஸ்ட்? நீங்க என்ன நினைக்குறீங்க?
X
லைகா பட நிறுவனமும் இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்து கொண்டு சரியாக திட்டமிடாமல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்குவதும் நிறுத்தப்படுவதுமாக இத்தனை ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. படம் குறித்த தகவல்கள் வெளியாகி காலதாமதம் ஆகிக்கொண்டிருப்பதற்கு, ஒருவகையில் லைகா நிறுவனமும், படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனியும் ஒரு காரணம் என்கிறார்கள்.

ஏற்கனவே மகிழ்திருமேனி, அஜித்துடன் ஒருமுறை சண்டை போட்டதாகவும், அதனால் கோபித்துக்கொண்ட அஜித் நேரடியாக சூட்டிங்கிலிருந்து வெளியேறியதாகவும் தகவல் வந்திருந்தது. இந்நிலையில், தற்போது திரிஷாவுக்கும் மகிழ் திருமேனிக்கும் இடையில் ஒரு சண்டை வந்துள்ளதாம். இதனால் திரிஷா படப்பிடிப்பிலிருந்து கோபமாக வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் அர்ஜூனும் ஒருமுறை மகிழ்திருமேனியிடம் முகம் காட்டியதாக தெரிகிறது.

மகிழ்திருமேனி படத்தை மிகவும் ஸ்லோவாக எடுக்கிறார் என்கிற தகவலும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. லைகா பட நிறுவனமும் இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்து கொண்டு சரியாக திட்டமிடாமல் படத்தை அலைக்கழிப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஒருவழியாக இன்று படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், அந்த படம் தீபாவளிக்கு இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு. அமரன் திரைப்படமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் படங்களில் ஒன்றாகும். அதே ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் விடாமுயற்சி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ளது.

இதனால் தீபாவளிக்கு விடாமுயற்சியை வெளியிட முடியாத சூழல் நிலவுகிறது. இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்து கையைக் கடிக்கும் அளவுக்கு படநிறுவனம் வேலை செய்யாது என்கின்றனர். இதனால் விடாமுயற்சி படத்தை முன்கூட்டியே அதாவது அக்டோபர் 10ம் தேதியே வெளியிட திட்டமிடுகின்றனர்.

மிகவும் நெருக்கமாக நாள்கள் வருவதால் வேகவேகமாக படத்தை எடுத்து அப்படி அப்படியே எடிட் செய்து விரைவில் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

அக்டோபர் 10ம் தேதி ஏற்கனவே சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படமும் வர இருப்பதால் இந்த மோதல் மிகவும் சுவாரஸ்யமாக அமையப் போகிறது. கங்குவா Vs விடாமுயற்சி என சமூக வலைத்தளங்களில் வைரல் செய்து வருகின்றனர் இருதரப்பு ரசிகர்களும்.

படத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த மூன்றிலும் எந்த லுக் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை சொல்லுங்கள்.

கடந்த ஜூன் 30ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அஜித் கையில் பையுடன் ஹைவேயில் நடப்பது போல ஸ்டைலான ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது.

ஜூலை 8 ம் தேதி வெளியான செகண்ட் லுக் போஸ்டர் பலராலும் வரவேற்கப்பட்டது. இடது கையில் துப்பாக்கியுடன் வலதுகையை நெஞ்சில் மேல் வைத்து நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த லுக் அமைந்திருந்தது.

ஜூலை 19 ம் தேதி வெளியான தேர்ட் லுக்கில் அஜித்குமார், திரிஷா ஆகியோர் இருக்கின்றனர். இருவரும் அழகாக சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள் அஜித் கண்களில் கண்ணாடி அணிந்திருக்கிறார்.

வேற என்ன தெரியும்?

விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸுக்கு கொடுத்திருக்கின்றனர். மேலும் சாட்டிலைட் உரிமையை சன்டிவிக்கு கொடுத்திருக்கிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!