இன்று வருகிறது விடாமுயற்சி அடுத்த அப்டேட்!

இன்று வருகிறது விடாமுயற்சி அடுத்த அப்டேட்!
X
விடாமுயற்சி அடுத்த அப்டேட் இன்று வெளியாக இருக்கிறது !

இன்று வருகிறது விடாமுயற்சி அடுத்த அப்டேட்! | Vidaamuyarchi update today

அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாக இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அஜித்குமாரின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை படத்திலிருந்து புதிய அப்டேட் வர இருக்கிறது.

இதனை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அஜித்குமார் தவிர அர்ஜூன், திரிஷா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், இன்று வெளியாகும் அப்டேட் அநேகமாக ரெஜினா கேஸண்ட்ராவின் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!