Vidaamuyarchi heroine யார் தெரியுமா? பாலிவுட்டில் பரபர தேடல்!

Vidaamuyarchi heroine யார் தெரியுமா? பாலிவுட்டில் பரபர தேடல்!
X
Vidaamuyarchi heroine தேடல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அநேகமாக இந்த 5 நடிகைகளில் ஒருவர்தான் அஜித் ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Vidaamuyarchi heroine தேடல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அநேகமாக இந்த 5 நடிகைகளில் ஒருவர்தான் அஜித் ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரின் கடைசிய படம் துணிவு மிகப் பெரிய வசூலைப் பெற்று அவரின் வாழ்நாளில் அதிகபட்ச வசூல் செய்த படம் என்பதை அடைந்தார். இதனால் அடுத்த படத்தை அதைவிட மிகப் பெரிய படமாக உருவாக்க வேண்டும் என முடிவெடுத்து விக்னேஷ் சிவனிடம் இருந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு அடுத்ததாக மகிழ் திருமேனியை இயக்குநராக ஒப்பந்தம் செய்தார். லைகா தயாரிப்பில் இவர் நடிக்கும் படத்தை பெரிய அளவில் வியாபாரம் செய்து படத்தை பெரிதாக விளம்பரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். | Vidaamuyarchi shooting update

ஆரம்பத்திலிருந்தே படத்தின் பெயரை மக்கள் மனதில் பதியச் செய்ய வேண்டும் என நினைத்து அதற்காக முன்கூட்டியே படத்தின் டைட்டிலை வெளியிட்டார்கள். வழக்கமாக படப்பிடிப்பு முடிந்த பிறகே அஜித்குமாரின் படங்களுக்கு பெயர் வைக்கப்பட்டு அதனை வெளியிடுவார்கள். இம்முறை விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் முன்னரே பெயர் வெளியிடப்பட்டுள்ளது. | Vidaamuyarchi release date

அஜித்குமார் 62 என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படம் இப்போது விடாமுயற்சி எனும் பெயரிலேயே சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. | Vidaamuyarchi latest news

விடாமுயற்சி படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் யார் என்பது ரசிகர்களிடையே எழுந்து வரும் கேள்வியாக இருக்கிறது. ஆரம்பத்தில் நயன்தாரா என்று பேசப்பட்டது, ஆனால் அவர் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இப்போது படத்துக்கு பாலிவுட் நாயகிகள் யாரையாவது நடிக்க வைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாம். | Vidaamuyarchi heroine name

ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், கத்ரீனா கைஃப், கங்கனா ரனாவத் என பாலிவுட்டின் பிரபல நாயகிகளிடம் பேசப்பட்டு வருகின்றது. இவர்களில் ஒருவரே படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தாலும், அஜித்குமார் திரிஷாவை நடிக்க வைக்கலாம் என கூறியிருக்கிறாராம். | AK 62 heroine

இதனால் யாரை நடிக்க வைக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே விஜய் ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் இந்த படத்திலும் அவரே நடிக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. | Trisha in AK 62

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் முதல் வாரம் துவங்கும் எனவும் அதில் நடிகர் அஜித்குமார் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது. முதல் ஷெட்யூல் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தொடர்ந்து 40 நாட்களுக்கு படப்பிடிப்பு நடக்கும் எனவும், அதில் அஜித்குமார் பெரும்பான்மையான நாட்களுக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. | Vidaamuyarchi shooting start date

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா