VidaaMuyarchi யில் லியோ வில்லன்!? துபாயில் வேற லெவல் சர்ப்ரைஸ்..!

VidaaMuyarchi யில் லியோ வில்லன்!? துபாயில் வேற லெவல் சர்ப்ரைஸ்..!
X
விடாமுயற்சி படத்தில் லியோ படத்தின் வில்லன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

VidaaMuyarchi தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இருந்து மகிழ் திருமேனி இயக்குநராக மாறியதால், படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் தாமதமானது. இந்நிலையில், கடந்த மாதம் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியது.

அஜர்பைஜானில் ஆக்ஷன்

அஜர்பைஜானில் கார் சேசிங் அதிகம் நிறைந்த ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த கார் சேசிங் சீக்வென்ஸ் அஜித் ரசிகர்களுக்கு வெறித்தனமான ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்த படக்குழு, அடுத்து துபாய் பறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் துபாயில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். இதில், அஜித்துடன் த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மங்காத்தா படத்துக்குப் பின்னர் இந்தக் கூட்டணி மீண்டும் விடாமுயற்சியில் இணைவது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சியில் ஆக்ஷன் கிங்

விஜய்யின் லியோ படத்தில் ஹெரால்ட் தாஸ் கேரக்டரில் மிரட்டலான வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் அர்ஜுன். அதேபோல் த்ரிஷாவும் லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், லியோ பட வில்லன் அர்ஜுன், விடாமுயற்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் அஜித் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜுன், அஜித் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, விடாமுயற்சி படமும் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, படத்தொகுப்பாளராக விஜய் குமார் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்தப் படம் அடுத்தாண்டு சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி அப்டேட் | VidaaMuyarchi Diwali Update

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு துபாய், இந்தியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் தீபாவளி அப்டேட் ரசிகர்கள் விரும்பும் வகையில் இருக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளி ஸ்பெஷலாக விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர் அல்லது மேக்கிங் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரவ் என்னாச்சு?

விடாமுயற்சி படத்தில் பிக்பாஸ் ஆரவ் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடிக்கஇருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. ஆனால் ஆரவ்வும் படத்தில் இருக்கிறாராம். அர்ஜூன் சிறப்பு தோற்றத்தில் கொஞ்ச நேரம் வரும் வகையில்தான் இருக்கிறது என்றும் ஆரவ்தான் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எப்ப ரிலீஸ்?

லியோ படத்துடன் தொடங்கிய விடாமுயற்சி திரைப்படம் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. விஜய் தற்போது அடுத்த படத்துக்கே சென்றுவிட்டார். இதனால் அஜித் விடாமுயற்சி படத்தை வரும் ஏப்ரல் 2024 கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். தளபதி 68 படம் விநாயகர் சதுர்த்தி அல்லது சரஸ்வதி பூஜை தினங்களில் வரும்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!