விடாமுயற்சி இந்த படத்தின் காப்பிதானாம்! ஸாரி தழுவல்!

விடாமுயற்சி இந்த படத்தின் காப்பிதானாம்! ஸாரி தழுவல்!
X
விடாமுயற்சி திரைப்படத்தின் கதை ஏற்கனவே ஹாலிவுட்டில் வெளியான ஒரு படத்தின் தழுவலாம்.

அதிகாரப்பூர்வமாக உரிமம் வாங்கி இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்களாம். விடாமுயற்சியின் திரைக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்திருப்பதாகவும் மற்றபடி படத்தின் கதை அதுதான் என தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இது காப்பி அடிக்கும் படம் என்று கூறப்பட்டாலும், பின்னர் இது அதிகாரப்பூர்வமான ரீமேக் என்று இப்போது விளக்கம் கிடைத்துள்ளது.

Breakdown 1997

இது ஒரு நெஞ்சை பதறவைக்கும் த்ரில்லர் கதையாகும். பழைய கதையாக இருந்தாலும் இன்றைய காலத்துக்கு ஏற்ப சில மாறுதல்களுடன் விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறது படக்குழு.

ஒரு நெடுஞ்சாலை பயணத்தின் போது, மனைவி திடீரென காணாமல் போக, கணவனின் திகிலூட்டும் தேடுதல் – இதுதான் பிரேக்டவுன் திரைப்படம். கதை முழுவதும் ஒரு திணறல் உணர்வை தருவதுடன், பார்வையாளர்களை இருக்கை நுனிக்கே கொண்டுவருகிறது.

கர்ட் ரஸ்ஸல், ஜெஃப் ப்ரிட்ஜஸ் ஆகியோரின் நடிப்பு அபாரம். குறிப்பாக ரஸ்ஸல், தன் மனைவியைத் தேடும் பரபரப்பான கணவனாக, நம்மை கதையோடு ஒன்ற வைக்கிறார்.

திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டிருப்பதுடன், எதிர்பாராத திருப்பங்களும், பரபரப்பான காட்சிகளும் நம்மை கட்டிப்போடுகின்றன. ஒரு கட்டத்தில், நாயகன் சொல்வதை நம்புவதா? அல்லது மற்ற கதாபாத்திரங்கள் சொல்வதை நம்புவதா? என்ற குழப்பம் நம்மையும் சேர்த்து ஆட்கொள்கிறது.

ஜொனாதன் மோஸ்டோவ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம், அவரது திறமையை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை விரும்புபவர்களுக்கு, பிரேக்டவுன் நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். படம் முடிந்த பிறகும் அதன் தாக்கம் நம்மை விட்டு விலகாது.

இதே கதையில்தான் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.

முடிந்தது அஜர்பைஜான் ஷூட்

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. அஜித்குமார், அர்ஜூன், திரிஷா, ஆரவ் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுடன் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

மகிழ்திருமேனி

தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் என அடுத்தடுத்து சிறந்த திரைக்கதை கொண்ட படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார் மகிழ்திருமேனி. இதன் காரணமாகவே அவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இதனால் ரசிகர்கள் சோர்வடைந்து இருக்கின்றனர். இதுபோலதான் ஏற்கனவே வலிமை படத்திலும் நடந்தது. இதனால் விடாமுயற்சி படத்தை எப்பாடு பட்டாவது இந்த ஆண்டுக்குள் நிச்சயமாக திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது லைகா நிறுவனம்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.

ஓடிடி

இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் இணையதளம் வாங்கியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படத்தை திரையிட்டே ஆக வேண்டும் என்று நெட்பிளிக்ஸ் தரப்பில் அழுத்தம் தரப்படுவதாக கூறப்படுவதால், இந்த ஆண்டு நவம்பரில் விடாமுயற்சி திரைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!