இதுதான் அப்டேட்டா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

இதுதான் அப்டேட்டா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!
X
விடாமுயற்சி படத்திலிருந்து இன்று ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வலிமை அப்டேட் கேட்டு படக்குழுவை நச்சரித்த காலம் போயி இப்போது கேக்காமலே வாரம் ஒரு அப்டேட் கொடுக்கிறது படக்குழு. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

அஜித்குமார் நடிக்கும் புதிய படமான விடாமுயற்சி மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு தாமதமாக பல இடங்களில் நடந்தாலும் ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் முழு படப்பிடிப்பையும் முடித்துக்கொண்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை படக்குழு ஆரம்பிக்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக இன்றே அப்டேட் வெளியிட தயாராகிவிட்டது படக்குழு. அந்த வகையில் இப்போது விடாமுயற்சி படத்திலிருந்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


மலையாள திரையுலகின் புதுமுக நடிகர், நிகிலின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருக்கிறது. இதனால் வரிசையாக படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி வருகிறது.

தமிழின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக விடாமுயற்சி திரைப்படம் இருக்கிறது. படத்தில் அஜித்குமாருடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களும் முன்னரே வெளியானது.

படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது உறுதியான தகவல் இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. அதேநேரம் படம் இந்த ஆண்டு நிச்சயமாக வெளிவரும் என்று மட்டும் தெரிகிறது.

படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதேநேரம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படமும் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த தகவல் இல்லாமல் இருக்கிறது. அந்த படத்தின் ரிலீஸைப் பொறுத்தும் விடாமுயற்சி படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!