/* */

ரெட்ஜெயண்ட் வெளியிடப் போகும் வெற்றிமாறன் படம்..!

Red Giant Movies - இயக்குநர் வெற்றிமாறனும் இசையமைப்பாளர் இளையராஜாவும் 'விடுதலை' படத்தில் முதன்முறையாக இணைகின்றனர்.

HIGHLIGHTS

ரெட்ஜெயண்ட் வெளியிடப் போகும் வெற்றிமாறன் படம்..!
X

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர். 

Red Giant Movies -இயக்குநர் வெற்றிமாறன் தற்போது, 'விடுதலை' எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாகக் கொண்டதாகும். படத்தின் நாயகனாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூரியும் வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

மேலும், பவானி ஸ்ரீ, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதன்மூலம் இளையராஜா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்கிற சிறப்பையும் இப்படம் பெறுகிறது.

இந்தநிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் அதிகாரப் பூர்வமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், படத்தில் சூரி, விஜய்சேதுபதி தோன்றும் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது. மேலும், விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Sep 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...