காத்தாடி மேகம் வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில் தனி ஆல்பம் பாடல் வெளியீடு
இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன், ஒரு தனித்த ஆல்பம் பாடலை, மறைந்த பாடகர், சரித்தர புகழ் வாய்ந்த, SP பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார். இப்பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.
இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன் இப்பாடல் குறித்து கூறுகையில்... இது என் வாழ்நாளின், பொக்கிஷமான மறக்கவியலாத அனுபவம், SP பாலசுப்பிரமணியம் அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் முழுதிலும், ஒரு ரசிகனின் மனோபாவத்தில் தான் இருந்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பது எனது நெடுநாளைய கனவு, அவருடனான எனது முதல் சந்திப்புகள், சரியாக 10 வருடங்களுக்கு முன்பானது. கோடம்பாக்கத்தில் நான் சவுண்ட் இன்ஞ்சினியராக வேலை பார்த்த ஸ்டுடியோவில் அவர் தன் பாடல்களின் பதிவுக்காக அடிக்கடி வருவார். "100 வருட இந்தியா சினிமா" விழாவிற்காக அவர் பாடிய பாடலுக்கு நான் தான் சவுண்ட் இன்ஞ்சினியராக வேலை பார்த்தேன். அப்போது தான் முதன் முதலில் அவரது டைரியில் எனது பெயர் சவுண்ட் இன்ஞ்சினியராக இடம்பெற்றது.
"காத்தாடி மேகம்" பாடல் அனுபவம் குறித்து கூறுகையில்.. SP பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ஒரு தனித்த ஆல்பம் பாடலில் பணிபுரிய வேண்டுமென பல நாட்களாக கனவு கொண்டிருந்தேன். முன்பே தனித்த ஆல்பம் பாடல்களில் அவர் பங்கு கொண்டிருந்தாலும் அவையாவும் ஆன்மிகம் குறித்ததாகவும், தத்துவார்த்தம் மிக்க பாடல்களாகவும் மட்டுமே இருந்தன. அந்த சமயத்தில் கவிஞர் குட்டி ரேவதியுடன் வேறொரு பணியில் இருந்தபோது என் கனவு குறித்து கூறினேன். அவரும் மகிழ்ச்சியடைந்தார்.
இந்த பாடலுக்காக SP பாலசுப்பிரமணியம் அவர்களை அணுகியபோது, புதுமுக இசையமைப்பாளர் என்கிற எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக பாட சம்மதித்தார். அவர் அமெரிக்க சுற்று பயணத்தில் இருந்த போது, இப்பாடலின் டிராக்கை இணையம் வழியே அவருக்கு அனுப்பினேன். டிராக்கை கேட்டவர் மிகவும் மகிழ்ந்து என்னை பாரட்டினார். பிற்பாடு இசைஞானி இளையராஜா அவர்களுடன் வேறு சில பாடல் பணிகளில், அவர் தொடர்ந்து பணியாற்றியதால் நான் நான்கைந்து மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இசைஞானி இளையராஜா அவர்களுடன் ஒரு பாடல் பதிவு தடைபட்ட நேரத்தில், விரைந்து வந்து, எனது பாடலை பாடி தந்தார். பாடல் பதிவின் போது 'உனக்கு நிறைய திறமை இருக்கிறது, நல்லபடியாக வர வாழ்த்துக்கள்' என வாழ்த்தினார்.
பாடல் ஒலிபதிவிற்கு பிறகு அவரை வைத்து வீடியோ எடுக்க ஆசை பட்டேன், ஆனால்திடீரென நிகழ்ந்த அவரது மறைவு, நாம் யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான நிகழ்வு. ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாக என்னுடன் உள்ளது.
"காத்தாடி மேகம்" பாடலின் தாமதம் குறித்து கூறுகையில்..அவர் மறைந்த நிலையில் கோடான கோடி ரசிகர்கள் அவர் மீது கொண்டிருக்கும் அன்பு, அனுதாபமாக இப்பாடலின் மீது விழ வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் தான் பாடலின் வெளியீட்டினை தள்ளி வைத்தேன். இப்போது அவரது பிறந்த நாளில் அவரது நினைவாக இப்பாடலை வெளியிடுவது மகிழ்ச்சி.
🎤- @ispbofficial
✍️- @kuttirevathi
🎹- @kvigneshwar
@starmusicindia @donechannel1 @sureshchandraaoffl @gobeatroute
@Editor_Ranjit @ProRekha
#IndieMusic #SPB75a
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu