'கோல்டன் விசா' பெற்ற வெங்கட்பிரபு: கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

கோல்டன் விசா பெற்ற வெங்கட்பிரபு: கௌரவித்த  ஐக்கிய அரபு அமீரகம்..!
X

கோல்டன் விசா பெரும் இயக்குனர் வெங்கட் பிரபு.

இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அமீரகம் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

திரைப்படத் துறையைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கு ஐக்கிய அரபு அமீரகம் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவித்துள்ளது. அந்த வகையில், தற்போது, தமிழ்த்திரையுலகின் நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அமீரகம் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பாலிவுட் நடிகர்களான சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த 'கோல்டன் விசா'வைப் பெற்றுள்ளனர். அதேபோல், தென்னிந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இந்த 'கோல்டன் விசா'வைப் பெற்றுள்ளனர்.

அண்மையில், நடிகர் விஜய் சேதுபதி, மீனா ஆகியோர் இந்த விசாவைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை எளிதில் இந்த 'கோல்டன் விசா'வை யாரும் எளிதில் பெற்றிட முடியாது. இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள், விசா பெற்ற அடுத்த பத்து வருடங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள் என்பதுதான் இதன் ஆகச்சிறப்பான பெருமிதமாகும்.

இந்நிலையில்தான், அண்மையில் தமிழ்த்திரையுலகில் 'மாநாடு', 'மன்மத லீலை' ஆகிய வெற்றிப் படங்களை கோடைகால விருந்தாக தமிழ் ரசிகர்களுக்கு அளித்த இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் 'கோல்டன் விசா' வழங்கி கௌரவித்துள்ளது. இதனை வெங்கட் பிரபுவும் அவரது ரசிகர்களும் பெருமிதம் பொங்க நினைத்து நினைத்து நெஞ்சம் நெகிழ்கின்றனர்.

இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை வெங்கட் பிரபு கேக் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடியதோடு, சமூகவலைத்தளங்களில் இதனைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் . தற்போது நாக சைதன்யா நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு அக்கட தேசத்திலும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!