விஜய் பட வாய்ப்பு கிடைத்தால் சிவகார்த்திகேயனை கழற்றி விடும் VP

விஜய் பட வாய்ப்பு கிடைத்தால் சிவகார்த்திகேயனை கழற்றி விடும் VP
சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், வெங்கட் பிரபுவுக்கு தளபதி 68 பட வாய்ப்பு கிடைத்திருப்பதால் சிவகார்த்திகேயனை கழற்றி விடுகிறார் என்று பேச்சு எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், வெங்கட் பிரபுவுக்கு தளபதி 68 பட வாய்ப்பு கிடைத்திருப்பதால் சிவகார்த்திகேயனை கழற்றி விடுகிறார் என்று பேச்சு எழுந்துள்ளது. | kamal haasan siva karthikeyan movie

பீஸ்ட் படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்த விஜய், அடுத்து தனது ஃபேவரைட் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்துள்ளார். விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக டப்பிங் முடித்துக் கொடுத்துவிட்டு விஜய் ஓய்வுக்கு சென்றுவிடுவார். அடுத்தாக தளபதி 68 படத்துக்காக தயாராக இருக்கிறார். | venkat prabhu vijay movie

தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரி தயாரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு திரைப்பட இயக்குநர்தான் இந்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அட்லீதான் இயக்குவார் என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அட்லீ வருண் தவானுடன் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிற தகவல் வெளியானதும், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிப்பார் என்றும் பேசப்பட்டது. | thalapathy 68 director

இந்நிலையில் தளபதி 68 படத்தை வேறு எந்த இயக்குநரும் இயக்கவில்லை நம்ம வெங்கட் பிரபுதான் அந்த இயக்குநர் என்று தற்போது தகவல் பரவி வருகிறது. கோலிவுட் வட்டாரத்தினரும் இதையே கூறுகின்றனர். இதனால் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கினால் சூப்பரான காம்பினேசனாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். | vijay venkat prabhu

இந்நிலையில் திடீரென்று தளபதி பட வாய்ப்பு வந்துள்ளதால் சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படம் என்ன ஆனது என பலரும் கேட்கத் துவங்கியுள்ளனர். சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ராஜ்குமார் பெரிய சாமி திரைப்படம் முடியவே அக்டோபர் ஆகிவிடும் என்றும் அதனால் நிச்சயமாக தளபதி படத்தை முடித்துக் கொண்டு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. | sivakarthikeyan upcoming movies

Tags

Next Story