'வெந்து தணிந்தது காடு' - வணிக ரீதியான வெற்றி..!
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15-ல் திரையரங்குகளில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் உற்சாகத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி. கிராண்ட் ஓட்டலில் பப்டத்தயாரிப்புத் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிலம்பரசன், "இதுவரையில் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத புதிய பேட்டர்னில் படம் உருவானதே படத்தின் வெற்றிக்கான காரணம். இந்த வெற்றியை சாத்தியமாக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும்கு முதல் நன்றி.
மேலும், இந்தப்படம் நல்ல படம் சிறந்த படம் என்று சொல்லி மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து என்னை தட்டிக்கொடுத்து தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு துணை நின்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
இங்கே தட்டிவிடுறவங்கதான் அதிகம். ஆனால், மீடியாக்கள் அதைச்செய்யவில்லை. நிறைய விமர்சனங்களை நான் படிச்சேன். பெரும்பாலானவர்கள் படத்தைப் பாராட்டி நன்றாகத்தான் எழுதியிருந்தார்கள்.
அதோடு, படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே நன்றாக நடித்திருந்தார்கள். நீரஜ் ரொம்ப நல்லா நடிச்சிருந்தார் நானே பார்த்து திகைத்துவிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல லைட்டே இருக்காது. ஓகே, லைட் ரெடி பண்ணிட்டு கூப்பிடுவாங்கன்னுட்டு உட்காரும்போது, " சார், ஷாட் ரெடி"ன்னு சொல்வாங்க. "இன்னும் லைட்டே போடலையேன்னு கேட்டா, " அவ்ளோதான் சார் லைட்"ன்னு சொல்வாங்க. அப்போ எனக்கு ஆச்சர்யமா இருந்தது.
ஆனால், இப்போ படத்தைப் பார்க்கும்போது பிரமிப்பாய் இருக்கு. ஒளிப்பதிவாளருக்கு நன்றி. மல்லிப் பூ பாடல் செம ரெஸ்பான்ஸ். ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு நன்றி. படத்தை வெளியிட உதவிய ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி" என்று பேசினார் சிலம்பரசன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu