வெளியானது 'வெந்து தணிந்தது காடு' - கொண்டாடும் சிலம்பரசன் ரசிகர்கள்..!

வெளியானது வெந்து தணிந்தது காடு - கொண்டாடும் சிலம்பரசன் ரசிகர்கள்..!
X

பைல் படம்.

Vendhu Thanindhathu Kaadu -சிலம்பரசனின் 'வெந்து தணிந்தது காடு' அதிகாலை 4 மணிக்கு சிறப்புக்காட்சிகளுடன் வெளியானது. படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Vendhu Thanindhathu Kaadu -'மாநாடு' படத்துக்குப் பிறகு, நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்த 'வெந்து தணிந்தது காடு' 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியது. சிலம்பரசனின் ரசிகர்கள் திரையரங்கங்களின் முன்பு அதிகாலையிலேயே குவிந்த வண்ணம் இருந்தனர். அதோடு, பட்டாசுகளை வெடித்தும் உற்சாக ஆட்டம் போட்டும் அந்தந்த ஏரியாக்களை அதகளப்படுத்தினர்.

இதற்கு முன்பு, 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சிலம்பரசன் ஆகிய மூவரின் கூட்டணியில் வெளியானதோடு, கவனிக்கத்தக்க வெற்றியைத் தந்து, வெற்றிக் கூட்டணி என்ற பெயரைப் பெற்றுத் தந்தன.

அந்தவகையில், தற்போது அதே மூவர் கூட்டணியில் வெளியாகி இருக்கும் 'வெந்து தணிந்தது காடு' படமும் வெற்றிப் படமாக அமையும் என்கிற பாசிட்டிவ் ஆரூடம் கோலிவுட்டில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

சிலம்பரசனின் ரசிகர்களால் பேனர் வைத்து, பட்டாசு வெடிச்சத்தம் விண்ணைப் பிளக்க, மேளதாள முழக்கங்கள் ஓங்கி ஒலிக்க நேற்று (15/09/22) அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகளுடன் வெளியான 'வெந்து தணிந்தது காடு' சிலம்பரசனின் திரைப்பயணத்தில் மீண்டுமொரு வெற்றிக்கணக்கைத் தொடங்கியிருக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!