'வீட்ல விசேஷம்' வெற்றியடைந்ததா...விளக்கம் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!

வீட்ல விசேஷம் வெற்றியடைந்ததா...விளக்கம் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!
X

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி.

RJ Balaji New Movie -நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, தனது நடிப்பில் வெளியான 'வீட்ல விசேஷம்' படத்தின் வெற்றி குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

RJ Balaji New Movie - அண்மையில், வெளியான நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் வசூலிலும் வரவேற்பிலும் அசாத்திய சாதனைபுரிந்து மூன்று வாரங்களைக் கடந்தும் அரங்கை நிறைத்து அதிரடியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, கடந்த 17/06/2022 அன்று உலகம் முழுதும் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான 'வீட்ல விசேஷம்' படத்தின் வெற்றி மற்றும் வசூல் குறித்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் படத்தின் நாயகனான ஆர்.ஜே.பாலாஜி.

அப்போது பேசிய அவர், "தற்போது உலகம் முழுவதும் 'வீட்ல விசேஷம்' திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வசூலைப் பற்றி பலரும் பலவிதமானக் கருத்துகளைக் கூறி வருகிறார்கள். வசூல் மட்டுமே படத்தின் வெற்றி கிடையாது என்பதை நான் நம்புகிறேன். ஆயினும், எங்களது முந்தைய படங்களைவிட இந்தப் படத்தின் வசூல் அதிகமாகவே இருக்கிறது. இந்தப் படம் மக்களுடைய வார்த்தைகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது. வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த வருடத்தின் லாபகரமான படங்களில் ஒன்றாக இந்தப்படம் அமையும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறோம். அதேநேரம், படத்துக்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்கள் மகிழ்ச்சியளிக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய பத்திரிகை மற்றும் ஊடகத்தினரோடு ரசிகர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி" என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story