300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாரிசு (பைல் படம்).
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கல் பண்டிகையொட்டி வெளியானது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார்.
இந்த படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாரிசு திரைப்படம் முதல் நாளே 19 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகின. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 11 நாட்கள் முடிவில் 250 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
தற்போது இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாக 26 நாட்கள் ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். #VarishHits300Crs , #VarisuBlockbuster என இரண்டு ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu