பத்து நாட்களில் பக்காவாக ஹிட்டடித்த 'ரஞ்சிதமே… கொஞ்சணுமே…' பாடல்..!

பத்து நாட்களில் பக்காவாக ஹிட்டடித்த ரஞ்சிதமே… கொஞ்சணுமே… பாடல்..!
X

பைல் படம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 'வாரிசு' திரைப்படத்தின் 'ரஞ்சிதமே... கொஞ்சணுமே...' பாடல் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது.

'பீஸ்ட்' திரைப்படத்திற்குப் பிறகு, வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக விஜய்க்கு ஜோடி சேர்ந்திருக்கிறார். மேலும், சரத் குமார், யோகி பாபு, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் படம் வெளியாவதை விட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார் என்றும் என்ன குட்டிக் கதை சொல்வார் என்பதை கேட்கவே ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பெரும் ஆவலோடு காத்திருப்பர். கடந்த முறை சன் பிக்சர்ஸ் அதற்கு வாய்ப்பில்லாமல் செய்து விட்டது. 'வாரிசு' படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், டிசம்பர் மாதம் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவுக்கு தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில், அண்மையில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தின் 'ரஞ்சிதமே…ரஞ்சிதமே.. கொஞ்சணுமே…' பாடல் வெளியாகிய பத்து நாட்களுக்குள்ளாகவே, ஏராளமான விஜய் ரசிகர்களின் கொண்டாட்டப் பாடலாக இப்பாடல் அமைந்துவிட்டது. அதோடு, இதுவரை ஏராளமான ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது.

ஆனாலும், 'வாரிசு' படத்துக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் மிகப்பெரிய தலைவலியாக பிரபாஸின் 'ஆதிபுருஷ்' ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் ரிலீஸ் கால தேதி அறிவிக்காமல் ஒரேயடியாக தள்ளிப் போனது. ஆனால், அதற்கு பதிலாக பவன் கல்யாணின் 'வால்டர் வீரய்யா', அகில் நடித்த 'ஏஜென்ட்:, பாலகிருஷ்ணாவின் 'வீரசிம்மா ரெட்டி' என மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களும் கொடுத்த அழுத்தம் காரணமாக டப்பிங் படங்களுக்கு அதிக தியேட்டர்களை வெளியிடக் கூடாது என ஆந்திரா பிலிம்சேம்பர் அதிரடி தடை உத்தரவையும் பிறப்பித்து, 'வாரசுடு' படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்து தெலுங்கு இயக்குநர் இயக்கினாலும், முடியாதுங்க பாஸ் என முடக்கி விட்டனர்.

ஆந்திராவில் அப்படி என்றால், தமிழ்நாட்டில் 'துணிவு' படத்தை வெளியிடப் போகும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஓனர் உதயநிதி ஸ்டாலின் இப்பவே பல சிங்கிள் தியேட்டர்களை 'துணிவு' படத்தின் வெளியீட்டுக்காக புக் செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பல பிரபல திரையரங்குகள், 'துணிவு' படத்தை வெளியிட கையொப்பம் போட்டு விட்டோம் என்றே ட்வீட் செய்து வருகின்றனர்.

'ஜில்லா' மற்றும் வீரம் படத்துக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் நேரடி மோதலை தவிர்த்து வந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு இருவரும் மோதி பார்த்து விட முடிவு கட்டியிருப்பது விஜய்க்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. பொங்கல் போட்டியில் இருந்தே 'வாரிசு' பின் வாங்கும் சூழல் இருப்பதாகவும் பேச்சுகள் கிளம்பி வருகின்றன.

இந்தநிலைலையில், வரும் டிசம்பர் மாதம் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய் தனது படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து பேசுவாரா? அல்லது அத்தனையையும் சமாளித்து விட்டேன், எதிர்பார்த்தபடி பெரியளவில் படம் ரிலீஸ் ஆக என்ன செய்தேன் என்பதை கூறுவாரா? என்பதைக் கேட்க மொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்து காததிருக்கிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!