பொங்கல் கொண்டாட்டமாக 'வாரிசு' படமும் 'துணிவு' படமும் வெள்ளித்திரையை அலங்கரிக்கப் போகிறது..!

பொங்கல் கொண்டாட்டமாக வாரிசு படமும் துணிவு படமும் வெள்ளித்திரையை அலங்கரிக்கப் போகிறது..!
X
Actor Vijay News -அஜித் குமார் - விஜய் ஆகியோரது படங்கள் பொங்கலுக்கு வெளிவரவிருக்கிறதாம். அதனால், இப்போதே ரசிகர்களுக்கு உற்சாகமாம்.

Actor Vijay News - பொங்கல், தீபாவளி என பண்டிகைக் காலங்களில் பண்டிகைக் கொண்டாட்டங்களோடு வெளியாகும் புதிய திரைப்படங்களும் கொண்டாட்டத்துக்கு உரியவைதான். திரைப்பட ரசிகர்கள், தங்களின் ஆதர்ச நாயகர்களின் படங்கள் அப் பண்டிகைக் காலங்களில் வெளியாகுமா என்பதை எதிர்பார்ப்பார்கள். அவ்வாறு, தங்களின் நாயகர்கள் படம் வெளியானால் அதுதான் அவர்களுக்கு நிஜமான பண்டிகைக் கொண்டாட்டமே.

அவ்வகையில், வரும் 2023-ம் ஆண்டின் பொங்கல் திருநாளை நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்குமார் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், 'வாரிசு', மற்றும் 'துணிவு' படங்களின் வரவுதான். ஆம். இவ்விரு படங்களும் பொங்கல் வெளியீடாக வெள்ளித் திரையை அலங்கரிக்கப் போகிறது.

நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள, 'வாரிசு' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் தொடங்கி, விறுவிறுவென நடந்து வருகிறது. இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட உள்ளன என்கிறார்கள் படக்குழுவினர்.

அதேபோல், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் மூன்றாவது முறையாக நடிக்கும் 'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், 'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், பொங்கலுக்கு, 'துணிவு' திரைப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம், 'வாரிசு'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும், இந்தப் படத்தில் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த்ள்ளனர். இந்தப் படத்தை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

இந்தநிலையில், 'வாரிசு' படம் தொடர்பான சுவாரசியத் தகவலை நடன இயக்குநர் ஜானி இன்று(14-10-2022) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர்," தளபதி விஜய் ரசிகர்களே, என் வார்த்தைகளை குறிச்சு வச்சுக்கோங்க. தளபதி விஜய்யின் மாஸான நடனத்தைக் காணத் தயாராகுங்கள். எவரும் திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கப்போவதில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்ர்.

அத்துடன், பாடல் நடன ஒத்திகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'வெகுநாட்களாகக் காத்திருந்து இன்று நான் கண்ட கனவு நிறைவேறியது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இறைவனுக்கும் என் அன்னைக்கும் நன்றி'' என பதிவிட்டிருந்தார். இந்த இருவருடைய ட்விட்டர் பதிவுகள் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, அவர்களை உற்சாகத் துள்ளலைப் போட வைத்துள்ளது.

இந்தநிலையில், வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி நடிகர் அஜித்குமாரின் 'துணிவு' திரைப்படமும் ஜனவரி 13-ம் தேதி நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் வெளியாகும் என்ற தகவலை கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!