'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!

பொன்னியின் செல்வன் படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
X
'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு நடந்த தாய்லாந்து நாட்டிலேயே, படத்தைப் பார்த்ததாக வனிதா விஜயகுமார் ட்வீட் செய்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் அடிக்கடி பல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்து வருபவர். இந்தநிலையில், அண்மையில், அவர் தாய்லாந்துக்கு விடுமுறையைக் கொண்டாடச் சென்றுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படம் வெளியான இத்தருணத்தில் வனிதா படத்தை தாய்லாந்திலேயே முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்ற தன் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.

ஆம். வனிதா விஜயகுமார் தாய்லாந்தில் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்ததை தனது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாய்லாந்து நாட்டு தியேட்டரில் அவர் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் ஆதரவும் பாராட்டும் தெரிவித்து ட்வீட்களை போட்டுவருகின்றனர். இந்தநிலையில், வனிதா விஜயகுமார் படத்தை பார்த்த போட்டோக்களை ஷேர் செய்ததோடு, தாய்லாந்தில் படம் பார்த்த யூடியூப் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அதில், விஐபி ஷோவில்தான் தாய்லாந்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்த்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.'பொன்னியின் செல்வன்' படத்தில் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளாக வரும் காட்சிகள் எல்லாம் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. யானை மீது ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி சவாரி செய்யும் காட்சி, ஐஸ்வர்யா ராய் யானையில் வந்து 'பொன்னியின் செல்வனை'க் காப்பாற்றும் காட்சி உள்ளிடவைகள் அங்கேதான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai future project