வந்தியத்தேவன் கார்த்தியின் ரொமான்ஸ் கேள்வி… குந்தவை த்ரிஷாவின் பதில் ட்வீட்..!

வந்தியத்தேவன் கார்த்தியின் ரொமான்ஸ் கேள்வி… குந்தவை த்ரிஷாவின் பதில் ட்வீட்..!
X

நடிகர் கார்த்தி மற்றும் நடிகை திரிஷா பகிர்ந்து கொண்ட டுவிட்டர் பதிவு.

'பொன்னியின் செல்வன்' படத்தினையொட்டி நடிகர் கார்த்தி மற்றும் நடிகை த்ரிஷா பதிவிட்டுள்ள ட்விட்கள் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் செப்டம்பரில் திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில், படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் படத்தில் தோன்றும் புகைப்படத்தை நாள்தோறும் ஒவ்வொரு போஸ்டராக வெளியிட்டு வருகிறார்கள்.

வந்தியத்தேவனாக கார்த்தியும் குந்தவை நாச்சியராக த்ரிஷாவும் தோன்றும் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனை மேலும் ரசிகர்களிடையே பிரபலப்படுத்த, த்ரிஷா போஸ்டர் வெளியான அன்று நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,

'இளவரசி Please send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!' என வந்தியத்தேவன் கதாபாத்திரத்திலேயே ஒன்றிப் போய் கிண்டலாக போட்ட ட்வீட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

நடிகர் கார்த்தியின் ட்வீட்டை தாமதமாகப் பார்த்த நடிகை த்ரிஷா தற்போது அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில்,

'Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed.' என பதில் பதிவிட்டு பரபரப்பாக்கியுள்ளார். இந்தநிலையில், கார்த்தி - த்ரிஷா ட்வீட்களை மிகவும் ரசித்த அவர்களது ரசிகர்கள் இருவரது ட்வீட்களுக்கும் பின்னூட்டம் போட்டு மேலும் உற்சாகமேற்றியுள்ளனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ள 'பொன்னியின் செல்வன்' டீசர் நிகழ்ச்சியில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் ராஜ உடையிலேயே வருகை தரப் போவதாகவும் பரவிவரும் செய்திகள் தமிழ்த்திரையுலக ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!