நடிகர் அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்
X
அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியானது . இதனையடுத்து அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் அதை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர் குறித்த தகவல்களால் ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்திருக்கிறது.


அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் மாதக்கணக்கில் காத்திருந்த நிலையில், வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது . இதனையடுத்து அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் அதை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் என்ற காம்போவில் உருவாகி வருகிறது வலிமை.. நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது கணவர் போனி கபூரின் பட நிறுவனத்துக்காக இரண்டு படங்களை நடித்து தருவதாக அஜித் உறுதி அளித்திருந்தார். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது வலிமையிலும் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாகியிருப்பவர் பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி, இவர் காலாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

2019ம் ஆண்டின் இறுதியில் ஹைதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், கொரோனாவின் இரண்டு அலைகளால் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெராமல் தள்ளிக்கொண்டே சென்றது. மேலும் படம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

பொறுமையிழந்த அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக வலிமை படம் குறித்த இரண்டு அப்டேட்கள் தற்போது கிடைத்திருக்கிறது. அதில் ஒன்று தான் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியானது. இதனால் உற்சாகமடைந்துள்ள அஜித் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடைபட்டிருந்த வலிமை படத்தின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.

வலிமை பட மோஷன் போஸ்டர் குறித்த தகவல்களால் ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இதனிடையே நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த 'காதல் கோட்டை' படம் வெளியாகி இன்று 25வது ஆண்டை கடந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது,

https://bit.ly/ValimaiMotionPoster

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!