ரஜினியை வாழ்த்திய வைரமுத்து: கங்கைஅமரன் காெடுத்த பதிலடி

ரஜினியை வாழ்த்திய வைரமுத்து: கங்கைஅமரன் காெடுத்த பதிலடி
X
திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு "தாதா சாகேப் பால்கே" விருது வழங்கப்பட்டது.

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு "தாதா சாகேப் பால்கே" விருது வழங்கப்பட்டது.

பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம் என்று பெருமையாக கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் பால்கே விருதுக்கு கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா பாேன்ற தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் அதிகமாேனார் உள்ளனர் என்பதையும் மத்திய அரசின் கவனத்திற்கு காெண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கைஅமரன் மத்திய அரசுக்கு தெரியாதா... நிச்சயமாக தகுதியுள்ள அனைவருக்கும் விருது கிடைக்கும் என்று பதிலளித்துள்ளார்.

Tags

Next Story