இசைப்புயலுடன் இணைந்த வைகைபுயல்: இணையத்தை கலக்கும் போட்டோ

இசைப்புயலுடன் இணைந்த வைகைபுயல்: இணையத்தை கலக்கும் போட்டோ
X

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம். 

‘மாமன்னன்’ பாடல் பதிவின் போது வடிவேலு, மாரி செல்வராஜ், யுகபாரதி ஆகியோர் உடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மாமன்னன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இது தொடர்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ், “மாமன்னன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. அத்தனையும் சாத்தியப்படுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கும், ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கும் நன்றி எனவும், பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் பிரியமும்” என்று கூறியுள்ளார். மேலும், படப்பிடிப்புத் தளத்தில் உதயநிதி, வடிவேலு, மாரி செல்வராஜ் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் மாமன்னன் படக்குழு திரைப்படத்தை வரும் ஜூன் மாதம் 29ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மாமன்னன் படம் குறித்த மற்றுமொரு மாஸ் அப்டேட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்காக வைகைப்புயல் வடிவேலு பாடல் ஒன்றை பாடி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த பாடல் பதிவின் போது வடிவேலு, மாரி செல்வராஜ், யுகபாரதி ஆகியோர் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளதாவது : “வைகைப்புயல் வடிவேலு உடன் பாடல் ஒன்றை பதிவு செய்தோம். அப்போது எங்கள் அனைவரையும் அவர் சிரிக்க வைத்து, இந்த தருணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டார்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story