வடிவேலு படம் நவம்பரில் ரிலீஸ்

வடிவேலு படம் நவம்பரில் ரிலீஸ்
X
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலு.
Vadivelu New Movie -வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Vadivelu New Movie -தமிழ் சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளாக நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்கள் மட்டும் அல்லாமல் அண்ணன், கதாநாயகனுக்கு நண்பன், தந்தை என்று பல்வேறு வேடங்களில் நடித்து வருகிறார். அவர் படத்தில் வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை ரசிக்கிறார்கள். பல படங்களில் பாடல் பாடியும் உள்ளார். கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்.

கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு டைரக்டர் ஷங்கர் தயாரித்த 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆனார். ஆனால் இந்த படம் தொடங்கிய உடனே வடிவேலுவுக்கும் டைரக்டர் ஷங்கருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் படத்தில் நடிக்க வடிவேலு மறுத்து விட்டார். இதனால் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் செய்தார். இந்த பிரச்சனையில் 5ஆண்டுகள் வடிவேலு சினிமாவில் நடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. வடிவேலுவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் யாரும் முன்வரவில்லை. வடிவேலு படங்களில் நடிக்க வில்லை என்றாலும் மீம்ஸ்களில், தொலைக்காட்சிகளில் இவரது காமெடி காட்சிகள் தொடர்ந்து காட்டப்பட்டு வந்ததால் மக்கள் மனதில் வடிவேலுவுக்கு தனி இடம் இருந்து கொண்டே இருந்தது. திரைப்படங்களில் வடிவேலுவை பார்க்க முடியாதவர்கள் அவர் நடித்த காமெடி காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்து திருப்தி பட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் டைரக்டர் ஷங்கர் – வடிவேலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. அதன் பிறகு மீண்டும் படங்களில் வடிவேலு நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது வடிவேலு மீண்டும் திரையில் கலக்கத்தொடங்கி விட்டார். அவர் மீண்டும் கதாநாயகனாக களமிறங்கியுள்ள உள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இதுமுழுக்க காமெடி படம். இந்த படத்தை டைரக்டர் சுராஜ் இயக்கி உள்ளார்.

அடுத்து அவருக்கு படங்கள் புக் ஆகி வருகின்றன. உதயநிதியுடன் மாமன்னன், ராகவா லாரன்சுடன் சந்திரமுகி 2 ஆகிய படங்களிலும் நடிக்கிறார். வடிவேலு தனது இரண்டாவது காமெடி பயணத்தை தொடங்கிவிட்டார். அவரது படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்று சினிமா ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்த நிலையில் அவர் நடித்துவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முழு சூட்டிங் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி விட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பொங்கலுக்கு வாரிசு, துணிவு படங்கள் ரிலீசாக உள்ளன. நவம்பர் மாதம் புதிய படங்கள் இல்லை. அதனால் அப்போது படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!