நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வேன் - நடிகர் வடிவேலு

vadivelu latest news - போண்டா மணிக்கு உதவுவேன், நடிகர் வடிவேலு உறுதி.
vadivelu news, vadivelu latest news- தற்போது சுராஜ் இயக்கி உள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில், நாயகனாக நடித்துள்ள நடிகர் வடிவேலு, அதையடுத்து உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்', பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில், உருவாகி வரும் 'சந்திரமுகி- 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த வடிவேலு, செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, தற்போது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஹீரோவாகவும், 'மாமன்னன்' படத்தில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி- 2, வில் காமெடி வேடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாக இருக்கும். அதோடு, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் பின்னணியும் பாடியிருக்கிறேன். அந்த பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறும் என்று கூறிய வடிவேலு, ஏற்கனவே என்னுடன் நடித்த நடிகர்களுக்கு ஏற்ற காமெடி டிராக் தற்போது இல்லாததால் மீண்டும் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. அதோடு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு கண்டிப்பாக என்னால் இயன்ற உதவி செய்வேன் என்றும், வடிவேலு தெரிவித்திருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu