தேசிய விருதுக்கு தயாராகி வருகிறார் வடிவேலு.. புகழ்ந்து தள்ளிய பிரபலம்

வடிவேலு.
Vadivelu National Award -நடிகர் வடிவேலு டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். மேலும் தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் ரசிகர்களின் பேராதரவுடன் திரையுலகில் வலம் வருகிறார்.
வடிவேலு இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளவர். இவரது நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் வீண்வம்பு இழுத்து அடிவாங்குபவராகவும், யாரேனும் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்டு அதன்மூலமாக அடிவாங்குபவராகவும், கைதேர்ந்த திருடனாகவும், மக்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுபவராகவும் தோன்றுவார்.
நகைச்சுவை மன்னனாக பல படங்களில் நடித்த வடிவேலு, சில வருடங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனால் ஹீரோ, காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார்.
இவர் ஏற்கனவே சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் தற்போது மாமன்னன் படத்தில் நடிப்பில் பிச்சு உதறி இருக்கிறாராம். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். அரசியல் கதையாக எடுக்கப்படும் இப்படத்தில் வடிவேல் கதாநாயகனாக நடிக்கிறார்.
வழக்கம் போல் காமெடி இருந்தாலும் சென்டிமெண்ட் காட்சிகளிலும் வடிவேலு சிறப்பாக நடித்துள்ளார். தற்போது திரையுலகில் இது பற்றிய பேச்சு அடிபடுகிறது. மேலும் சமீபத்தில் ஒரு விழாவிற்கு உதயநிதி சென்றிருந்தபோது, அங்கிருந்த அனைவரும் மாமன்னன் படத்தைப் பற்றி கேட்டுள்ளார்கள்.
அப்போது அவர், படத்தைப் பற்றி பேசுவதை விட வடிவேலுவைப் பற்றியே அதிகம் பேசினார். இந்த படத்தில் வடிவேலு அண்ணன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த கேரக்டருக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனால் படத்தின் மீதான ஆர்வமும் தற்போது அதிகரித்துள்ளது.
vadivelu latest news
பல வருடங்களாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த வடிவேலுவுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளால் ஒதுங்கியே இருந்தார். தற்போது புது உத்வேகத்துடன் மீண்டும் நடித்து வெளிவந்துள்ள மாமன்னன் நிச்சயம் அவருக்கு பல விருதுகளையும், நல்ல மறுபிரவேசத்தையும் பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தைத் தவிர தற்போது ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு நடித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த வகையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிஸியான நடிகராக மாறியிருக்கிறார் வடிவேலு.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu