வற்றிப் போன வடிவேலு சிந்தனை! முறிந்து போன முருகேசன் காமெடி!
சந்திரமுகி 2 படத்தில் வடிவேலுவின் காமெடி சென்ஸ் ஒர்க் ஆகவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
HIGHLIGHTS

மாப்ள...மாப்பு...வச்சிட்டான்யா ஆப்பு.. இந்த வசனத்தை பேசாத ஆள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. இது வடிவேலு முருகேசனாக நடித்த சந்திரமுகி பாகம் 1 படத்தின் பிரபலமான டயலாக். பேய் இருக்குன்றாங்க பிசாசு இருக்குன்றாங்க 30 வருசமா 30 அடியில பாம்பு ஒன்னு இருக்குறதா சொல்றாங்க என வடிவேலு பேசும் ஒவ்வொரு வசனமும் பயங்கர கைத்தட்டல்களைப் பெற்றது.
சீப்பும் வச்சிருக்கோம். சீவிட்டு கலச்சி விட்ருவோம் உள்ளிட்ட பல காமெடிகள் இந்த படத்தை தூக்கி நிறுத்தியது. இதுமட்டுமின்றி வடிவேலு - நாசர் - ரஜினிகாந்த், வடிவேலு - நயன்தாரா - ரஜினிகாந்த் காம்பினேசன் காட்சிகளும் படத்துக்கு பாசிடிவ்வாக அமைந்தன. இப்படி ஒரு படத்தை கொடுத்த வாசு இதன் இரண்டாம் பாகத்தை வடிவேலுவை நம்பி விட்டிருந்தால் கூட படம் நன்றாக வந்திருக்குமோ என்னவோ.
சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் வடிவேலு
சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார் ஆகியோரைத் தவிர வேறு எந்த கதாபாத்திரமும் மனதுக்கு நெருக்கமாக அமையவில்லை. ராதிகாவின் கால்ஷீட்டை ஏன் இப்படி வீணாக்கியிருக்கிறார்கள் தெரியவில்லை. வடிவேலுவை அவர் போக்கில் போகவிட்டு நடிப்பை வாங்குவதா, இல்லை நாம் சொல்வதை நடிக்க வைப்பதா என்பது தெரியாமல் குழம்பியிருக்கிறார் இயக்குநர்.
படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 7.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்வரை வசூலித்துள்ளது. முதல் பாகம் வெளியானபோது முதல் நாளில் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் வடிவேலு
படம் குறித்த விமர்சனங்கள் பெரும்பாலும் நேர்மறையாகவே உள்ளன. ஜோதிகா மற்றும் ரஜினிகாந்த் நடித்த முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் சந்திரமுகி மற்றும் வேட்டையன் கதாபாத்திரங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்திற்காக வடிவேலு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர், ரூ 2 கோடி இருப்பார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுவரை வடிவேலு நடித்த எந்தப் படத்திற்கும் இதுதான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது.
சந்திரமுகி படத்தில் வடிவேலு
வடிவேலு நன்றாக நடிப்பார் என்பது அனைவரும் அறிந்த விசயம்தான் ஆனால் அதற்கான காட்சிகள் எதுவுமே அமையவில்லை. முற்றிலும் சோடை போன ஒரு முருகேசனைத் தான் படத்தில் காண்கிறோம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்துள்ள படங்களில் ரஜினியையும் ஓவர்டேக் செய்து காமெடி செய்வார் இதை அவரே பல நேரங்களில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இப்போது கடைசியாக வந்துள்ள சில படங்களில் வடிவேலு காமெடி கொஞ்சம் கூட ஒர்க் ஆகவில்லை என்று பலரும் கருத்து தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.
மாமன்னன் படத்தில் வடிவேலு
இன்னும் சிலர் வடிவேலுவுக்கு மாமன்னன் போன்ற கதாபாத்திரங்கள் இன்னும் கூடுதல் அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. அந்த லைனைப் பிடித்துக் கொண்டு போவதுதான் சிறந்த யோசனை என்று கூறுகின்றனர்.