எதிர்பாராத வெற்றியில் 'மாயோன்':கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்..!

எதிர்பாராத வெற்றியில் மாயோன்:கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்..!
X

கேக் வெட்டி கொண்டாடிய மாயோன் படக்குழுவினர்.

Actor Sibiraj - நடிகர் சிபிராஜ் நாயகனாக நடித்த 'மாயோன்' வெற்றியை படத்தின் தயாரிப்பாளர், படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்பாடினார்.

Actor Sibiraj -உச்ச நட்சத்திர அணிவகுப்பு… பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் பிரமாண்ட தயாரிப்பு… ஆர்ப்பாட்ட விளம்பரங்கள்.. என்று படாடோபப் படங்களின் வெற்றி என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால், அவ்வாறான படங்களின் கொண்டாட்டங்களுக்கு இடையே சில சின்ன பட்ஜெட் படங்கள்… பெரிய பெரிய நட்சத்திரப் பட்டாளம் எதுவுமின்றி சில படங்கள் ஒரு சில தருணங்களில் எதிர்பாராத வெற்றியைக் குவிப்பதுண்டு.

அப்படியோர் வெற்றியைத்தான் அண்மையில், தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியான 'மாயோன்' திரைப்படம் பெற்றுள்ளது. படத்தின் இந்த வெற்றி படக்குழுவினரை மகிழ்ச்சியில் திளைக்கவைத்துள்ளது. எதிர்பாராத அளவில் வெற்றியை ஈட்டித்தந்த 'மாயோன்' படத்தின் சக்ஸஸ் மீட்டை படத்தின் தயாரிப்பாளர், படக் குழுவினரை அலுவலகத்திற்கு வரவழைத்து, வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு, படத்தின் நாயகனான சிபிராஜ் தங்கச் சங்கிலியொன்றை பரிசளித்து சர்ப்ரைஸ் ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, வரும் ஜூலை 7-ம் தேதியன்று தெலுங்கில் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக தெலுங்கு 'மாயோன்' வெளியாகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!