கமல்ஹாசன் படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றிய ரெட்ஜெயன்ட் மூவீஸ்

கமல்ஹாசன் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்
உலக நாயகன் கமல்ஹாசனின் "விக்ரம்"படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியது
உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் "விக்ரம்". பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.
சமீபகாலங்களாக ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல முக்கிய நடிகர்களின் படங்களை கைப்பற்றி விநியோகித்து வருகிறது. விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்', பிரபாஸின் 'ராதே ஷ்யாம்', சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகித்த அந்த நிறுவனம், ஆர்ஆர்ஆர் படத்தை ஒரு சில இடங்களில் மட்டும் விநியோகித்து.
மேலும், விஜய்யின் பீஸ்ட் மற்றும் விஜய் சேதுபதியின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படங்களின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதுடன் தற்போது விக்ரம் உரிமையையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ் திரையுலகின் பெருமைமிகு திரைப்படமாக உருவாகும் விக்ரம் படத்துடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி என ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
தயாரிப்பு - கமல்ஹாசன், R.மகேந்திரன் (ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்)
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
சண்டை பயிற்சி - அன்பறிவு
ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன்
வசனம் - ரத்ன குமார், லோகேஷ் கனகராஜ்,
படத்தொகுப்பு - பிலோமின் ராஜ்
கலை - N.சதீஷ் குமார்
காஸ்டியூம் டிசைனர் - பல்லவி சிங், V.சாய், கவிதா.J
மேக்கப் - சசி குமார்
புரொடக்ஷன் கண்ட்ரோலர் - M.செந்தில்
எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் - S.டிஸ்னி
பப்ளிசிட்டி டிசைனர் - கோபி பிரசன்னா
சவுண்ட் டிசைன்ஸ் - SYNC Cinema
VFX - UNIFI Media, VFX Phantom, Real Works Studio
DI - IGENE
இணை இயக்குனர்கள் - மகேஷ் பாலசுப்ரமணியம், சந்தோஷ் கிருஷ்ணன், சத்யா, வெங்கி, விஷ்ணு இடவன், மெட்ராஸ் லோகி விக்னேஷ்
மக்கள் தொடர்பு - டைமண்ட் பாபு, சதிஷ் (AIM)
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu