டைரக்டர் சுதா கொங்கரா கைவசம் இரண்டு படங்களுக்கு வலுவான கதை இருக்குதாம்

மாதவன் ஆக்டிங்-கில் உருவான 'இறுதிச் சுற்று' படத்தின் மூலம் டைரக்டரா அறிமுகமானவர் சுதா கொங்கரா. மணிரத்னத்திடம் அசிஸ்டென் டைரக்டரா ஒர்க் பண்ணிய இவர், மொதல் படத்திலேயே ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இதையடுத்து சூர்யாவை வைத்து 'சூரரைப் போற்று' படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதையடுத்து தனது அடுத்த படத்திற்காக அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களிடம் சுதா கொங்கரா கதை கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் 'சூரரைப்போற்று' படத்திற்கு சூர்யாவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் உறுதியான தகவல் வெளியாச்சு. இதற்கிடையே கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்போலே நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்குது.
இந்த அறிவிப்புக்கு பிறகு படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். ஒரு பக்கம் அந்த படத்திற்கு சூர்யா தான் ஹீரோ என்றும், மற்றொருபுறம் வேறு ஒருவர் ஹீரோ அப்படீன்னு காவேரி டீ ஸ்டால் வாசலில் பெட்டிங்கே நடந்து வருதாம்.
இந்நிலையில் இந்த குழப்பம் குறித்த புதுத் தகவல் கசியுது. அதன்படி இரண்டு படங்களுக்கு சுதா கொங்கரா கதை வைத்துள்ளதாகவும், அதில் 1960-களில் நடப்பது போன்ற கதையில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும், மற்றொன்று டெல்லியில் துணிச்சலாக செயல்பட்ட அதிகாரியின் கதையாக உருவாக இருப்பதாகவும், இது உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்டு உருவாக இருக்கிறது என்றும் கூறப்படுது. இந்த படத்தைதான் ஹோம்போலே நிறுவனம் தயாரிக்கிறது. அதனால் இந்த படத்தை ஆக்டர் கார்த்தியை வச்சி இயக்கி முடிச்சுட்டு, அடுத்ததாக சூர்யா படத்தை சுதா கொங்கரா கண்டினியூ பண்ணுவாராம்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu