/* */

மொத்த பட்ஜெட் 5 கோடி, இரண்டு நாள் வசூல் 9 கோடி: பட்டய கெளப்பும் 'லவ்டுடே'

Love Today 2022 Budget And Collection -லவ் டுடே படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக இப்படத்திற்கான தியேட்டர்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன

HIGHLIGHTS

மொத்த பட்ஜெட் 5 கோடி, இரண்டு நாள் வசூல் 9 கோடி: பட்டய கெளப்பும் லவ்டுடே
X

Love Today 2022 Budget And Collection -பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் படமான 'கோமாளி' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது படமான 'லவ் டுடே' படத்தில் அவரே ஹீரோவாக நடித்து இயக்கினார்.

படத்தின் கதை:

ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பர் சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும்.

இந்த காலகட்டத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டும் படம் லவ் டுடே . இந்தப் படம் தற்போது உள்ள இளைய சமுதாயத்திடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் முதல் இரண்டு நாள் வசூல் படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு என கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் பிரதீப் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா இப்படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசான இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதல் நாளில் இப்படம் 2.5 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் 5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்களில் இந்த படம் 9.26 கோடி வசூல் செய்ததாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு இன்னும் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு பிரபல நடிகர்கள் வலைவீசி வருவதாக தெரிகிறது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் தமிழ் திரை உலகின் பெரிய நடிகர் ஒருவர் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 9:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!