14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணையும் திரிஷா

14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணையும் திரிஷா
X

பைல் படம்.

Thalapathy 67-14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்-த்ரிஷா ஜோடி தளபதி 67-இல் மீண்டும் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் #Thalapathy67 புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்-லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இந்த படக்குழு காஷ்மீரில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது.

நேற்று இந்தப் படத்தில் நடிப்பவர்களின் பட்டியலை வெளியிட்டனர். சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜூன், இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டனர். மேலும், இன்றைய தினமும் தளபதி 67 படம் குறித்து அப்டேட் தொடர்ந்து வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி படங்களுக்கு பிறகு விஜய் – த்ரிஷா ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர். இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில். "14 ஆண்டுகளுக்கு பிறகு ஆன் ஸ்க்ரீனில் அற்புதமான ஜோடியை மீண்டும் காண தயாராகுங்கள்." என்று கூறியுள்ளது. மேலும் கில்லி, திருப்பாச்சி, குருவி படத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். "எனக்கு மிகவும் பிடித்த, மிகவும் திறமை மிக்க டீமுடன் இணைந்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது." என்று த்ரிஷா கூறியுள்ளார்.

https://twitter.com/Jagadishbliss/status/1620695515116769280?t=7i_JldYzlYMSuPgbq1kUZQ&s=08

படபூஜை போட்டோக்கள், படத்தின் அறிவிப்பு டீசர் போன்றவற்றின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!