'தளபதி 67' படத்தில் நடிகர் விஜய்க்கு மீண்டும் ஜோடி சேரும் திரிஷா

தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு மீண்டும் ஜோடி சேரும் திரிஷா
Thalapathy 67 -'தளபதி 67' படத்தில் நடிகர் விஜய்க்கு மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் நடிகை திரிஷா.

Thalapathy 67 -திரைப்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 67. விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கூறியுள்ளார்.


இந்த படத்தில் வில்லன்களாக பிரித்விராஜ், சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கின்றனர். மேலும், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போகிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது.


இந்நிலையில், தற்போது தளபதி 67 படத்தில் விஜய்யின் மனைவி கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் கூறுகின்றனர். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக விஜய், திரிஷா இணைந்து நடிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story