எல்லா படங்களிலும் 'மெசேஜ்' என்பது அவசியமில்லை; நடிகை த்ரிஷா
trisha news- நடிகை த்ரிஷா
trisha exclusive interview for raangi,trisha news - தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. அவரது நடிப்பில் ஏராளமான படங்கள் ரசிகர்கள் பலரின் பேவரைட் லிஸ்ட்டிலும் உள்ளது.
சாமி, கில்லி, கிரீடம், அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா, 96, பேட்ட உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் த்ரிஷா நடித்துள்ளார். அதே போல, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். நடிகை நயன்தாராவை போலவே, நடிகை த்ரிஷாவும் சமீபகாலமாக, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது 20 ஆண்டுகால சினிமா பயணத்தில், பல நல்ல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று வெளியாகி இருந்தது. இதில் 'குந்தவை' என்னும் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்த நிலையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். பிளாக்பாஸ்டர் படமாக மாறி இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் 2023ம் ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் த்ரிஷா நடிப்பில், அடுத்ததாக 'ராங்கி' என்ற திரைப்படமும், வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்து சேனல் ஒன்றுக்கு பிரத்தியேக பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியின் போது நடிகை த்ரிஷா, சினிமா பற்றிய தனது கருத்துகளை மனம் திறந்து பேசியுள்ளார்.
'சினிமா என்பது ஒரு மேஜிக். படம் பார்க்க வரும் ஆடியன்ஸ் பலரும், தங்களது மன அழுத்தங்களில் இருந்து விடுபட, தியேட்டருக்கு வருகின்றனர். நானும் கூட அந்த மாதிரியான ஒரு மனநிலையில், சினிமா தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்றதுண்டு. அப்போது, பார்க்கும் படங்கள் மனதுக்கு சற்று ஆறுதலை அளிக்கிறது. அந்த மாதிரிதான். சினிமாவை, கருத்து சொல்லும் விஷயமாக மட்டுமே பாரக்கக் கூடாது.
சினிமாவில் 'மெசேஜ்' இருக்கலாம். பல படங்கள் அப்படி நல்ல சமுதாய கருத்துகளை மக்களுக்கு தந்துள்ளது. ஆனால், அனைத்து படங்களிலுமே 'மெசேஜ்' இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சினிமாவை ஒரு பொழுதுபோக்காக, மனதுக்கு ரிலாக்ஸ் தரும் ஒரு வடிவமாக, ஒரு மேஜிக் போல கண்டுகளித்து செல்வதையும் ரசிகர்கள் விரும்புகின்றனர். எனவே, அப்படிப்பட்ட படங்களும் வரவேண்டியது அவசியம், என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu