விஜய்க்கு மீண்டும் ஜோடியாகிறாரா த்ரிஷா?

விஜய்க்கு மீண்டும் ஜோடியாகிறாரா த்ரிஷா?
X

actor vijay latest news-நடிகர் விஜய் பைல் படம்.

actor vijay latest news-நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

actor vijay latest news-மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பில் மிரட்டியிருப்பார். கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலகநாயகனின் விக்ரம் படத்தை இயக்க சென்றார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே விக்ரம் படத்தை தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது.

இந்நிலையில் மறுபக்கம் விஜய் நெல்சனின் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். வழக்கமான விஜய் படங்களைப்போல இல்லாமல் சற்று வித்தியாசமாக வாரிசு திரைப்படம் உருவாவதாக படக்குழு தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளது.

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படத்தை திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாரிசு படத்தை அடுத்து விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் வெளியிடப்படும் என தெரிகின்றது. இந்நிலையில் தளபதி 67 படத்தைப்பற்றி சமூகத்தளங்களில் பல தகவல்கள் உலா வருகின்றன.

actor vijay latest news-தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் இதற்கு முன்பு கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என பல படங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே ஹிட் கூட்டணியாக பார்க்கப்படும் இவர்களின் கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணையவுள்ளதாக வந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்