பொன்னியின் செல்வன் -2 டிரைலர் எப்போது?

பொன்னியின் செல்வன் -2 டிரைலர் எப்போது?
X

பைல் படம்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரம் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.

இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 1-ம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
latest agriculture research using ai