இசையின் ராஜா, இசைஞானி இளையராஜாவிற்கு நாளை 81-வது பிறந்த நாள் விழா

Happy Birthday Ilayaraja
X

Happy Birthday Ilayaraja

Happy Birthday Ilayaraja-இசையின் ராஜா, இசைஞானி இளையராஜாவின் 81-வதுபிறந்த நாள் விழா நாளை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இசைஞானி இளையராஜா தனது 81 வது பிறந்தநாள் விழாவை நாளை கொண்டாடுகிறார்.

Happy Birthday Ilayaraja-இசைக்கே ராஜா... இசை ஞானி... மேஸ்ட்ரோ என்றெல்லாம் புகழப்படுபவர் இளையராஜா. இசைஞானி இளையராஜாவின் அருமை, பெருமைகளை பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம். எழுதினால் பக்கங்கள் ஆயிரத்தை தாண்டும். தாண்டிக் கொண்டே இருக்கும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் ஒரு இசை கடவுள். அதனால் தான் அவர் இசை ஞானி என அழைக்கப்படுகிறார்.

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சுயம்புவாக இசையில் ஆவர்த்தனம் செய்து வருபவர் இளையராஜா என்று சொன்னால் மிகை ஆகாது. அன்றைய மதுரை மாவட்டம் இன்றைக்கு தேனி மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ள பண்ணை புரத்தில் கிராமத்து சூழலில் பிறந்தவர் தான் நமது இளையராஜா. அவரது இயற்பெயர் ராசையா. மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன். கிராமத்து நாட்டுப்புற பாடல்களை பொது இடங்களிலும் தெருக்களிலும் கூத்து போல் இசையுடன் நடத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பாவலர் வரதராஜன். அவரது இசைக் குழுவில் தனது 14 வது வயதிலேயே இணைந்து இசைக்கத் தொடங்கிய இசை இன்று அவரது 81 வது வயது வரை ஓய்வில்லாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் அவர் என்றைக்கு 14 வயதில் இசையை தொடங்கினாரோ அன்று முதல் இன்று வரை ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பதும், நவீன சூழலுக்கு ஏற்ப புதுமையை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற மன நிலையும் தான் காரணம்.

பொதுவாக கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பார்கள் அதை போல் தான் இளையராஜாவும் இசையயை 14 வயதிலேயே கற்றுக் கொண்டாலும் இந்த அசை மேதை வெளி உலகத்திற்கு தெரிய தொடங்கியது அவரது 32வது வயதில் தான்.

ஆம் அதாவது 1976 ஆம் ஆண்டு தான் 1976 ஆம் ஆண்டில் பஞ்சு அருணாசலத்தின் தயாரிப்பில் வெளிவந்த அன்னக்கிளி திரைப்படம் தான் இவர் இசையமைத்த முதல் திரைப்படம். அந்த படம் வெளிவந்த ஐந்து ஆண்டுகளிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவரது இசை கோலோச்சியது என்றால் இவருடைய வளர்ச்சி எப்படி இருந்திருக்கும். அவருடைய ரசிகர்கள் எப்படி என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

கிராமத்து சூழலில் நாட்டார் இசை மட்டுமே அந்த காலகட்டத்தில் அவருக்கு தெரிந்திருந்தாலும் எப்போதும் ஆர்மோனிய பெட்டியுடன் அலைந்து கர்நாடக இசையையும் மேற்கத்திய செய்யும் பயின்று வந்தார். அதுவே பிற்காலத்தில் அவர் சினிமாவில் கால் ஊன்றுவதற்கு அடித்தளமாக அமைந்தது. பட்டணம் முதல் பட்டி தொட்டி வரை எங்கு பார்த்தாலும் இந்த இசை ராஜாவின் இசையை கேட்காதவர்கள் இருக்க முடியாது.

கால சூழலுக்கு ஏற்ப மேற்கத்திய இசை கர்நாடக இசை ஆகியவற்றையும் கற்றுக் கொண்டார். சினிமா துறையில் இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். காதல், ஆக்சன், செண்டிமெண்ட், நகைச்சுவை, குடும்ப படம் ,கிராமத்து சூழல், நகரத்து சூழல், பக்தி படம், நவீன திரைப்படம் என எத்தனை ரூபத்தில் சினிமா வந்தாலும் அத்தனை ரூபத்தில் வந்த சினிமாக்களுக்கும் இவரது இசை அதற்கு தகுந்தார் போல் மாறும் அதுதான் இளையராஜாவின் திறமை.

இந்திய செவ்வியல் இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை அனைத்திலும் இன்று வரை அவர் கற்றுக் கொண்டே இருக்கிறார் அதனால் தான் அவர் இந்த 81 வயதிலும் இசைஞானியாக பார்க்கப்படுகிறார். 1943 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி பிறந்த நமது இசைராஜா இளையராஜாவிற்கு ஜூன் இரண்டாம் தேதியான நாளை 80 வயது முடிந்து 81 வயது பிறக்கிறது.

இளையராஜாவின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு கடந்த 20128ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதினை வழங்கி கௌரவித்தது .அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை அப்போது அவர் வழங்கினார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு குடியரசுத் தலைவரால் நாடாளுமன்ற நியமன குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. ஆதலால் இந்த ஆண்டு 81 ஆம் வயதினை இசைஞானி இளையராஜா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ஒரு கூடுதல் தகுதியுடன் கொண்டாடுகிறார்.

சொல்ல வேண்டுமா ராஜாவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள இளையராஜாவிற்கு இன்றே வாழ்த்துக்கள் சமூக வலைத்தளங்களிலும் குவிய தொடங்கிவிட்டது. ஹேஷ்டேக்குகளையும் உருவாக்கி அவரது ரசிகர்கள் இசையின் ராஜாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!