பிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு இன்னிக்கு பிறந்த நாள்
காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி
'வெண்ணிற ஆடை' படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமான பிரபல காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு பிறந்த நாள்💐
காமெடி ஆக்டர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வக்கீலுக்கு படித்தவர், கலை மீதுள்ள ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, இயக்குனர் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.1965-ல் வந்த 'வெண்ணிற ஆடை' படத்தில் மூர்த்தியோடு சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா ஆகியோரும் அறிமுகமானார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு மூர்த்திக்கும், நடிகை நிர்மலாவுக்கும் 'வெண்ணிற ஆடை' என்கிற பெயர் நிலைத்துப் போனது.
''பப்..பப்.., புர்..ர்..! பாப்பா... ஒன்னப் பாத்தா எனக்கு பீறிட்டுக்கிட்டு வருது, சிரிப்பு...!', என அவர், ஸ்டெயிட் மீனிங்கிலேயே பேசினாலும், அந்தக் காமெடிக்கு பெண்கள் பக்கம் இருந்தும் 'குபீர்' சிரிப்பு வரும்!
தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியனாக மாறிய 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.
தன்னுடன் நடித்த மணிமாலாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பெரியத்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்த இவர், முதுமையின் காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். இன்று 'வெண்ணிறஆடை' மூர்த்திக்கு 83-வது பிறந்த நாள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu