சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் பாஜக தலைவர் அண்ணாமலை -Special Photos

சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்  பாஜக தலைவர் அண்ணாமலை -Special Photos
X

அண்ணாமலை நடித்துள்ள படத்தின் போஸ்டர் 

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, கன்னட திரைப்படம் ஒன்றில், 1 ரூபாய் சம்பளம் பெற்று நடித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கர்நாடகாவில் பணி புரிந்ததால், அந்த மாநிலத்துடன் நல்ல தொடர்பில் உள்ளவர்; அங்கு நல்ல அறிமுகம் கொண்டவர்.

இந்த நிலையில், கன்னட திரைப்படம் ஒன்றில், பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ளார். ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் அரபி (Arabbie) என்ற படத்தில், நீச்சல் பயிற்சியாளராக அண்ணாமலை நடிக்கிறார்.


இப்படமானது, இரு கைகளையும் இழந்து, நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. விஸ்வாஸின் வாழ்க்கையால் மிகவும் ஈர்க்கப்பட்ட கன்னட இயக்குநர் ராஜ்குமார், அதை மையமாக வைத்து 'அரபி' என்ற இப்படத்தை இயக்கியுள்ளார்.

சினிமாத்துறையில் இல்லாத, அதே நேரம் மக்களால் நன்கு பரவலாக அறியப்பட்ட ஒருவரை, பயிற்சியாளராக நடிக்க வைக்க வேண்டுமென்று இயக்குனர் விரும்பினார். அந்த நேரத்தில் தான், அவருக்கு அண்ணாமலை நினைவுக்கு வந்தார்.


இதையடுத்து படக்குழுவினர் அண்ணாமலையை அணுகினர். தன்னம்பிக்கையூட்டும் கதையால் ஈர்க்கப்பட்ட அண்ணாமலை, அரபி படத்திற்காக வெறும் 1 ரூபாய் மட்டும் சம்பளமாக பெற்றுக் கொண்டு நடித்துள்ளார். இன்று மாலை இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து, விவசாயி ஆக மாறிய அண்ணாமலை, இப்போது துடிப்பான அரசியல்வாதியாக திகழ்கிறார். இந்த நிலையில், சினிமாவிலும் அண்ணாமலை எண்ட்ரி கொடுத்திருப்பது, பாஜகவினர் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!