'பொன்னியின் செல்வன்' படத்துக்கு மிரட்டல்..!

பொன்னியின் செல்வன் படத்துக்கு மிரட்டல்..!
X
Ponniyin Selvan Movie -இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின்செல்வன்' படம் கனடாவில் வெளியாக உள்ள திரையரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan Movie -இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ள கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' இன்று (30/09/2022) உலகமெங்கும் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. இப்படம் இயக்குநர் மணிரத்னத்தின் நீண்டகால கனவு. அக்கனவின் ஒரு பகுதியாக, மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக 'பொன்னியின் செல்வன்' படம் உருவாகியுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி,பார்த்திபன், ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நாளை 'பொன்னியின் செல்வன்' வெளியாகவிருக்கும் இந்தநிலையில், நாளை கனடாவில் படம் வெளியாகும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 'பொன்னியின் செல்வன்' தமிழ் அல்லது மெட்ராஸ் டாக்கீஸ் திரைப்படத்தை இயக்கினால் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 'பொன்னியின் செல்வன்' படத்தினை எப்படி வெளியிடுவீர்கள்? என்று பார்ப்போம் என எச்சரிக்கை விடுத்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் திரையரங்க உரிமையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!