திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கவிருந்த நயன்தாரா... மிஸ் ஆனது எப்படி?

திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கவிருந்த நயன்தாரா... மிஸ் ஆனது எப்படி?
X

திருச்சிற்றம்பலம் பட போஸ்டர்.

Thiruchitrambalam movie heroines-திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் யார் தெரியுமா?

Thiruchitrambalam movie heroines-மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த வாரம் தியேட்டர்களில் ரிலீசானது. வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் நான்கே நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தின் பலமே அதில் நடித்த நடிகர், நடிகைகள் தான். குறிப்பாக இதில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள மூன்று ஹீரோயின்களின் கேரக்டர்களும் சிறப்பாக எழுதப்பட்டு இருந்தன. அதிலும் நித்யா மேனன் நடித்த ஷோபனா கேரக்டர் தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது. இந்த 3 ஹீரோயின்களும் கடைசி நேரத்தில் ஒப்பந்தம் ஆனவர்கள் தானாம். முதலில் இவர்களுக்கு பதில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இப்படத்தை முதலில் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்ததாம். அதனால் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்ட தனுஷ், நித்யா மேனன் நடித்த ஷோபனா கேரக்டரில் நடிகை நயன்தாராவையும், ராஷி கண்ணா கதாபாத்திரத்தில் ஹன்சிகாவையும், பிரியா பவானி சங்கர் கேரக்டரில் சமந்தாவையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம்.

Thiruchitrambalam movie heroines-ஆனால் கடைசியில் இப்படம் சன்பிக்சர்ஸ் தயாரிக்க முன்வந்ததால், ஹீரோயின்களும் மாற்றப்பட்டு எடுக்கப்பட்டதாம். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக நித்யா மேனன் நடித்த ஷோபனா கேரக்டர் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்ததால் அதில் நயன்தாரா நடித்திருந்தால் அது அவருக்கு செட் ஆகி இருக்காது என்றும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!