திரைப்பயணத்தில் முப்பது ஆண்டு… நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு தயார்..!

திரைப்பயணத்தில் முப்பது ஆண்டு… நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு தயார்..!
X

நடிகர் விஜய்(பைல் படக்ஸ்்)

நடிகர் விஜய் திரையுலகில் நடிக்கத் தொடங்கி முப்பதாண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொண்டாடட்டத்துக்கு தயாராகிறார்.

இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சேண்டல்வுட், பாலிவுட் உள்ளிட்ட அந்தந்த மாநிலத்தின் திரையுலகின் முன்னணி நாயகர்களின் திரைப்படங்கள் வெள்ளித் திரையில் வெளியாவதற்கு முன்பே, அப்படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடுதலாகவே இருக்கும் என்பது இயல்பான ஒன்று.

அவ்வகையில், நடிகர் விஜய் தற்போது, இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் 'வாரிசு' திரைப் படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப் படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரித் திங்களில் பொங்கல் வெளியீடாக வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது. எனவே, இப்போதிலிருந்து நடிகர் விஜய்யின் ரசிகர்கள் 'வாரிசு' திரைப்படத்தின் வெளியீட்டு கொண்டாட்டத்துக்கான முன்னெடுப்புகளைத் தொடங்கிவிட்டார்கள்.

இந்தநிலையில், கூடவே திரையுலகப் பயணத்தில் நடிகர் விஜய் முப்பதாண்டுகளைக் கடந்த கொண்டாட்டத்துக்கும் அவரது ரசிகர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். நடிகர் விஜய் தொடர்ந்து அவரது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். அதன் அடையாளமாக அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாகப் பல படங்களில் நடித்துள்ள விஜய், 'நாளைய தீர்ப்பு' திரைப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப் படத்தில் பல நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்ட விஜய், தன்னை முதன்மைக் கதாநாயகனாக்கிக் கொள்ள கடந்துவந்த பாதை சற்று கரடுமுரடானதுதான்.

தொடக்கத்தில் பலர் இவரை, ''எண்ணெய் வடிந்த முகத்துடன், இவரெல்லாம் நடிக்க வந்துவிட்டார்'' என்றெல்லாம் விமர்சனங்களை முன்வைத்தனர். அத்தனையையும் விஜய் தனது தொடக்கக் காலத்தில் எதிர்கொண்டார். தொடர்ந்து தன்மீது வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை நேர்மறையாக மாற்றிக் கொள்ளப் போராடினார் விஜய். 'பூவே உனக்காக' போன்ற படங்கள் இவரது பயணத்தை வெற்றிப் பாதையில் மாற்றியது. தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்தார் விஜய்.

அடுத்தடுத்த வெற்றிகள் இவரை ரசிகர்களிடையே முதன்மை நாயகனாக அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த வெற்றியை அடைய நடிகர் கொடுத்த உழைப்பும் சந்தித்த கடினங்களும் மிக அதிகம். தன்னை நடிகராக மட்டுமின்றி பின்னணிப் பாடகராகவும், தயாராப்பாளராகவும் திரையுலகில் அடையாளப்படுத்திக் கொண்டார். தற்போது வரை தன்னுடைய படங்களில் பாடல்களைப் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகர் விஜய், தன்னுடைய தொடக்க காலப் படங்களில் இருந்து தற்போதைய 'வாரிசு' திரைப் படம் வரை பின்னணிப் பாடல்களைப் பாடி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறார். இவரது குரலில் பல வெற்றிப் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. பல படங்களில் தன்னுடைய மென்மையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், அதுகுறித்தான கருத்துள்ள திரைப் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்தநிலையில்தான், அவர் இன்னும் சில தினங்களில் திரையுலகில் தன்னுடைய முப்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யவுள்ளார். இதற்காக இந்தத் தருணத்தை கொண்டாடும் வகையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பல விஷயங்களை செய்து வருகின்றனர். வரும் டிசம்பர் 4-ம் தேதி அவர் தனது முப்பதாவது ஆண்டு திரையுலகக் கொண்டாட்டத்தை எட்டவுள்ளார். அவரது முதல் படமான, 'நாளைய தீர்ப்பு' கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையே ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடுவது அவரது ரசிகர்களின் வழக்கம். அந்த நாளில் நடிகர் விஜய் நடித்த படங்களின் பிரத்யேக அறிவிப்புகள் வெளியாகும். கடந்த பிறந்தநாளின்போதுகூட 'வாரிசு' படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகின. இந்தநிலையில், நடிகர் விஜய்யின் முப்பதாவது ஆண்டு திரையுலகப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு சிறப்பு விஷயங்களைச் செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதனூடாக, அன்றைய தினம் நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப் படத்தின் இரண்டாவது சிங்கிள் அல்லது 'தளபதி 67' திரைப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'வாரிசு' திரைப் படத்தின் 'ரஞ்சிதமே…ரஞ்சிதமே... ' முதல் பாடல் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல, 'தளபதி 67' திரைப் படத்தின் அறிவிப்பிற்காக நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!