பொன்னியின் செல்வன் 2: பல கெட்டப்புகளில் கலக்கும் திரிஷா..

Ponniyin Selvan Kundavai Images
Ponniyin Selvan Kundavai Images-தமிழ் சினிமாவின் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்போடு குந்தவையாக நடித்துள்ள த்ரிஷாவின் சமீபத்திய ஃபோட்டோ ஷூட் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. த்ரிஷாவின் ஃபோட்டோ ஷூட் அப்டேட்களால் சமூக வலைதளம் நிரம்பி வழிகிறது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்போடு குந்தவையாக நடித்துள்ள த்ரிஷாவின் சமீபத்திய ஃபோட்டோ ஷூட் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. த்ரிஷாவின் ஃபோட்டோ ஷூட் அப்டேட்களால் சமூக வலைதளம் நிரம்பி வழிகிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கோடை விடுமுறையில் ஏப்ரல் 28- ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இச்சூழலில் பட ரிலீசுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து பொன்னியின் செல்வன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் காத்திருப்பிற்கேற்ப, திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 2023 சம்மர் ஸ்பெஷலாக பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகும் என சென்ற ஆண்டே மணிரத்னம் அறிவித்ததுடன் முழு ஷூட்டிங்கையும் ஏற்கெனவே ஒரேடியாக முடித்து விட்டார். இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் -2-வின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பினை படக்குழு த்ரிஷாவின் ஃபோட்டோ ஷூட் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். நீலம், ஆரஞ்சு, சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் குந்தவை க்யூட் உடைகளில் ஃபோட்டோ ஷூட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவான திரைப்படம். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகி உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. கல்கியின் ப்ரியர்களும் இந்தப் படத்தை கொண்டாடினர். ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா, ஜெயராம் என மிக பெரிய திரை பட்டாளமே ஒன்று திரண்டு நடித்த இப்படத்தின் மெய் மயக்கும் பாடல்களுக்கு இசையமைத்து இருந்தார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். பாடல்கள் ஹிட், காட்சிகளும் சிறப்பாக அமைந்துவிட்டன. 450 கோடிகளுக்கும் மேல் வசூலை வாரிக் குவித்து தமிழ் சினிமாவின் பெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu