இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி - 2' படப்பிடிப்பு துவக்கம்

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில்   சந்திரமுகி - 2 படப்பிடிப்பு துவக்கம்
X
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிப்படமாக சாதனை படைத்த 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த 'சந்திரமுகி' படம் 2005-ம் ஆண்டு வெளியாகியது. சுமார் ஆறு கோடி பட்ஜெட்டில் தயாராகி சற்றேறக்குறைய 40 கோடி ரூபாய் பெற்றுத்தந்து வசூலில் சாதனை படைத்த படம் என்ற பெயரைப் பெற்றது. மேலும், ஒரே திரையரங்கில் சுமார் 850 நாட்களுக்கும் கூடுதலாக ஓடியபடம் என்ற சாதனையையும் பெற்றது. பி.வாசு இயக்கத்தில், சிவாஜி புரடக்‌ஷன்ஸ் தயாரித்த இப்படத்தில், ரஜினிகாந்த்துடன் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தில் ரஜினி - வடிவேலு ஜோடியின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது எனலாம்.

இந்தநிலையில் மீண்டும் பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி - 2' படத்தினை உருவாக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றன. படத்தின் நாயகனாக ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். படத்தினை லைகா புரடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி மைசூருவில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. தற்போது, படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி