ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்

ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
X

பைல் படம்.

பதான் படம் பிடிக்கவில்லை என கூறிய குழந்தைக்கு ஷாருக்கான் பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வசூலை பெறவில்லை. ஆமிர் கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்த படங்கள் வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்தன.

இந்தநிலையில் பதான் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருவதால் படக்குழுவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அடுத்தடுத்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்தி திரையுலகில் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் பதான் திரைப்படம் கணிசமான வசூலை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக, படத்தை புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்களில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன. ஆனால் அவற்றை மீறி, படக்குழுவினர் எதிர்பார்க்காத வகையில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.


இந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு பதான் படத்தை காட்டி, அந்த படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு அந்த குழந்தை தனக்கு பிடிக்கவில்லை என பதிலளித்திருக்கிறது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த ரசிகர். அதற்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.

இதற்கு ஷாருக்கான், "இனி நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். இளைய ரசிகர்கள் ஏமாற்றமடைய விடக்கூடாது. நீங்கள் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படத்தை உங்கள் குழந்தைக்கு காண்பியுங்கள். அந்த மாதிரியான படங்கள் அவர்களுக்கு பிடித்திருக்கலாம்" என தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதும் பதான் படம் 700 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.

தனது முந்தைய படங்களை போன்று அல்லாமல், பதான் திரைப்படத்திற்கு ஷாருக்கான் தனிப்பட்ட முறையில் புரமோஷன் ஏதும் செய்யாதது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!