தி கேரளா ஸ்டோரி ஏன் சர்ச்சை ஆகின்றது? இதோ இவைதான் காரணங்கள்!
The Kerala Story Controversy
The Kerala Story Controversy-சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' மே 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் கதை கட்டாய மத மாற்றத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும், பயங்கரவாதக் குழு அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது கேரளத்திலிருந்து பலர் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆளப்பட்ட சிரியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது இந்த படத்தில் காட்சிகளாக வருகிறது.
படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து இதனைப் பார்த்த சமூக நல ஆர்வலர்கள் பலரும் இது, "மோசமான வகையான வெறுப்புப் பேச்சு" மற்றும் "ஒலி காட்சி பிரச்சாரம்" ஆகியவற்றின் அடிப்படையில் இருப்பதை உணர்வதாக கூறினர். இதனையடுத்து இந்த படத்தை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை செவ்வாய்கிழமை அன்று விசாரித்த உச்சநீதி மன்ற அமர்வு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. "இந்த படம் சான்றிதழ் பெற்றுள்ளது மற்றும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று மேற்கோள் காட்டி இதனை நிராகரித்தது உச்சநீதி மன்றம்.
இது சங்பரிவாரின் செயல். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்து மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். முக்கியமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இதனை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஐ. எஸ். ஐ. எஸ் குழுவிற்கு கேரளத்திலிருந்து 32000 பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றி சிரியாவிற்கு அழைத்துச் சென்றதாக சில ஆண்டு காலமாக பேச்சு எழுந்து வருகிறது. இது நிரூபிக்கப்படாத செய்தியாக இருப்பினும் இதனை சங்பரிவார் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த பலரும் பேசுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் 32 ஆயிரம் பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது யாராலும் நிரூபிக்கப்படாத ஒரு விசயமாகவே இன்று வரை இருக்கிறது. இதுவே கடுமையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைக்கும் ஆளாகியிருக்கிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu