நடிகர் தனுஷ் மிகவும் திறமையானவர் : ஹாலிவுட் நட்சத்திரங்கள் புகழாரம்!

நடிகர் தனுஷ்  மிகவும் திறமையானவர் :  ஹாலிவுட் நட்சத்திரங்கள் புகழாரம்!
X

தி கிரே மேன் பிரீமியர் ஷோவில் மகன்கள் உடன் நடிகர் தனுஷ்

Hollywood applauses actor Dhanush : கோலிவுட்டில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலும் சாதித்த நடிகர் தனுஷ், தற்போது ஹாலிவுட்டிலும் தனது தடத்தை பதித்து, அங்கு அங்கீகாரமும் பெற்று உள்ளார்.

Hollywood applauses actor Dhanush : கோலிவுட்டில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலும் சாதித்த நடிகர் தனுஷ், தற்போது ஹாலிவுட்டிலும் தனது தடத்தை பதித்து, அங்கு அங்கீகாரமும் பெற்று உள்ளார்.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இயக்குனர்களான ருஸோ சகோதரர்களின் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கிரே மேன்' படத்தில், நமது தனுஷ் நடித்து உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி தான். இந்த படம், அமெரிக்காவில் வெளியாகி உள்ள நிலையில், ஜூலை 22ஆம் தேதி முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில், இந்த படம் குறித்த பிரீமியர் நிகழ்ச்சி, அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் பங்கேற்று இருந்தார். இந்த படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

பிரீமியர் ஷோவில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள், தனுஷின் நடிப்பு, திறமை, அவரது அர்ப்பணிப்பை புகழ்ந்தனர்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ள ரியான் கோஸ்லிங் கூறியதாவது, தனுஷ், நம்பமுடியாத அளவிற்கு திறமைகளை கொண்டவராக உள்ளார். சண்டைக்காட்சிகளில் அவர் ஒருமுறை கூட எவ்வித தவறும் செய்யவில்லை. படத்தில் எங்களுக்கு எதிரி என்று அவர் என்றாலும், அவரின் அசாத்திய நடிப்புத்திறமை, அவரை எங்கள் ஹீரோ என்ற அளவிற்கு உயர்த்திவிட்டது. நான் உட்பட இந்த படத்தில் நடித்த எல்லோரும் அவரது ரசிகர்களாகவே மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மற்ற நட்சத்திங்களான கிரிஸ் ஈவன்ஸ், அனா டி அர்மாஸ் உள்ளிட்டோர் கூறியதாவது, தான் செய்யும் வேலைகளில், தனுஷ் மிகுந்த ஈடுபாட்டை காட்டி வருவதாலேயே, அவர் இன்று இந்தளவிற்கு உயர முடிந்து உள்ளது. மிகவும் கம்பீரமாக உள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இனி வெளிநாட்டு மக்களும் ''செஞ்சிருவேன்'' என்று தனுஷ் டயலாக் பேசும் வீடியோக்கள் வெளிவரும் நாள் மிகத்தொலைவில் இல்லை!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!