வைபவ் கொடுத்த அப்டேட்... தி கோட் ல என்ன நடக்குது?

வைபவ் கொடுத்த அப்டேட்... தி கோட் ல என்ன நடக்குது?
X
Vijay teams up with director Venkat Prabhu for an action-packed project titled 'The Greatest of All Time'. The star-studded cast includes Prabhu Deva, Prasanth, Sneha, and Vaibhav, promising a potential cinematic blockbuster.

தி கோட் படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் நடிகர் வைபவ். தனக்கு தெரிந்தது இதுமட்டும்தான் என்று கூறி இன்டர்வியூவில் பேசியிருக்கிறார். அதில் அவர் தளபதி விஜய்யுடன் நடத்திய உரையாடல் குறித்தும் இடம்பெற்றிருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜு - தளபதி விஜய் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் 'லியோ', திரையரங்குகளை அதிரவைத்து வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் அடுத்த மாஸ் என்டர்டெயின்மென்ட்டுக்காக கவனத்தை வேறு பக்கம் திருப்பியிருக்கிறார்கள். ஆம், நடனப் புயல் பிரபுதேவா, நடிகர் பிரசாந்த் என்று ஏகப்பட்ட பிரபலங்களை உள்ளடக்கிய படத்தில் களமிறங்குகிறார் விஜய்! விஜய்யின் 68-வது படத்தை முதல்முறையாக இயக்குநர் வெங்கட்பிரபு கையில் எடுக்கவிருப்பதுதான் ப்ரேக்கிங் நியூஸ்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோருடன் மோகன், சிநேகா, மீனாட்சி உள்ளிட்டோரும் படத்தில் இருக்கின்றனர். இன்னும் பல நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் கதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வைபவ் தனக்கு கதை குறித்து எதுவும் தெரியாது. என்னிடம் எதையும் கூறவில்லை. எனக்கே கதை தெரியாது நான் எப்படி டவுட் கேட்பேன் என விஜய் அண்ணாவிடமே கேட்டேன் என்று கூறியுள்ளார்.

கலகலப்புக்கும் குத்துப்பாட்டுக்கும் பெயர்போன வெங்கட்பிரபு இந்தமுறை இயக்கும் 'The Greatest of All Time', செம ஆக்‌ஷனோடு ஒரு வித்யாசமான களத்தில் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. 'சென்னை 28', 'மங்காத்தா', 'மாநாடு' என்று தொடர்ந்து வித்தியாசமான கதையமைப்பில் ரசிகர்களை சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் ஹிட்டடித்த வெங்கட்பிரபு முதல்முறையாக தளபதியை வைத்து பட்டையை கிளப்ப காத்திருக்கிறார்.

முன்பெல்லாம் விஜய் படமென்றால் பஞ்ச் டயலாக்குகள், பாட்டு, அதிரடி ஆக்‌ஷன்தான் ஹைலைட். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கதைத் தேர்விலும் விஜய் ரொம்பவே கவனமாக இருப்பது நம் எல்லாருக்கும் தெரியும். அப்படி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தளபதி விஜய்யுடன் செம மாஸ், கமர்ஷியல் படங்களைக் கொடுத்த வெங்கட்பிரபு கை கோர்க்கப் போவது... தமிழ் சினிமாவின் 'The Greatest of All Time' இதுவாகத்தான் அமையுமோ?

வெங்கட்பிரபுவின் படங்களில் ஹீரோயின் கேரக்டர் பெரும்பாலும் 'சப்போர்டிவ்' மாதிரிதான் இருக்கும். ஆனால் 'லியோ' படத்தில் திரிஷாவுக்கு போல்டான ரோல் கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஒருவேளை அதேபோல இந்த 'The Greatest of All Time' படத்திலும் ஸ்னேகா, மீனாட்சி சௌத்ரிக்கு பவர்ஃபுல் கேரக்டர்ஸ் கொடுத்திருக்கலாம்! முழு விவரங்களை படக்குழு விரைவில் வெளியிடும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவா - விஜய் காம்போவை ஏற்கனவே 'போக்கிரி', 'வில்லு' படங்களில் ரசித்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக 'வில்லு' படத்துல அந்த 'வாடா.. மாப்பிள்ளை' பாட்டு வேற லெவல் ஹிட்டானது நினைவிருக்கலாம். இந்த கூட்டணியில் மறுபடியும் நம்ம டான்ஸ் ஃப்ளோரை அலற விட தயாராகுங்கள்! இன்னொருபுறம் 90ஸ் கிட்ஸின் ஃபேவரிட் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதியுடன் இணையப் போவது இளைஞர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டுசென்றுள்ளது. இத்தனை நட்சத்திரங்களுடன் 'சர்கார்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இப்போது திரைப்படங்களில் பிசியாக இருக்கும் மோகன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சும்மாவா சொன்னாங்க 'The Greatest of All Time'னு? உங்க ஆல் டைம் ஃபேவரிட் வைபவும் இந்த காம்போவில் இருக்கார்னா அந்த கூட்டணி வைக்கும் அடி அடுத்த லெவலில் தான் இருக்கும். உற்சாகம் பொங்க காத்திருங்கள் மக்களே!

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்